Connect with us

நெல்லை தொழிலாளியின் புதிய முயற்சி… களிமண்ணில் விதைகளை வைத்து விநாயகர் சிலை…!

Latest News

நெல்லை தொழிலாளியின் புதிய முயற்சி… களிமண்ணில் விதைகளை வைத்து விநாயகர் சிலை…!

நெல்லையை சேர்ந்த தொழிலாளி ஒருவர் களிமண்ணில் விதைகளை வைத்து விநாயகர் சிலையை செய்திருக்கின்றார்.

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற ஏழாம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை கிருபா நகரில் மூன்று அடி முதல் 12 அடிவறையில் விநாயகர் சிலைகளை வட மாநில தொழிலாளர்கள் தயாரித்து விற்பனை செய்வார்கள். இப்படி தயார் செய்யப்படும் சிலைகள் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் வாங்கி பிரதிஷ்டை செய்யப்பட்டு அவற்றை தாமிரபரணி ஆற்றில் கரைப்பார்கள்.

இந்த சிலைகளில் ரசாயன கலவை மிகுந்ததாக இருப்பதால் அவற்றை ஆற்றில் கரைக்கும் போது நீர் மாசுபடுகின்றது என்று சமீப காலமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விநாயகர் சிலைகள் தயாரிப்பதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பிளாஸ்டிக் கலவையால் செய்யப்படும் விநாயகர் சிலைகளை தயாரிக்க கூடாது என்றும் அதனை பிரதிஷ்டை செய்யக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆற்றில் கரைக்க இந்த சிலைகளுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் களிமண்ணாலான விதை விநாயகர் சிலைகளை தயார் செய்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கின்றார் நெல்லை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 63 வயதான மண்பாண்ட தொழிலாளி வேல்முருகன்.

ஒவ்வொரு பண்டிகை காலங்களுக்கும் ஏற்றார் போல் களிமண்ணில் பல்வேறு வேலைபாடுகள் செய்து வருகின்றார். 40 வருடத்திற்கு மேலாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வரும் இவர் தற்போது களிமண்ணில் நாவல் மரம் மற்றும் நெல்லிக்காய் மரத்தின் விதைகளை வைத்து விநாயகர் சிலையை உருவாக்கி இருக்கின்றார்.

இந்த சிலைகள் 100-லிருந்து 1000 ரூபாய் வரை விலை போவதாகவும் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த சிலைகளுக்கு வரவேற்பு அதிகமாக இருப்பதாகவும் வேல்முருகன் கூறியிருக்கின்றார். பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இவரது களிமண்ணால் ஆன விநாயகர் சிலை விற்பனை அமோகமாக இருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

More in Latest News

To Top