தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் மின்சார நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் பாலாஜி ஆய்வு செய்தார். பொது மக்களிடம் புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மின்தடைகள் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனுக்குடன் சரி செய்யும் படியும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும் தெரிவித்திருக்கின்றார். தடையில்லா சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தி இருக்கின்றார்.
எதிர்வரும் வடகிழக்கு பருவமழையின் போது எதிர் கொள்ள வேண்டிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எடுத்துள்ளதாகவும், மின்விநியோகம் சார்ந்த குறைபாடுகளை சரி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் 94987 94987 என்ற தொலைபேசி சேவை மின்னகத்தை தொடர்பு கொள்ளும் படியும் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.