---Advertisement---

வீட்டின் சுவர் ஏறி குதித்து… பிரபல நடிகையை கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது…!

By Sri
Published on: October 5, 2024
---Advertisement---

பிரபல நடிகையான சோனாவின் வீட்டு சுவரை ஏறி குதித்து அவரிடம் கத்தியை காட்டி விரட்டிய இருவரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் பிரபல கவர்ச்சி நடிகை வந்தவர் சோனா. இவர் குசேலன் திரைப்படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்திருப்பார். தமிழில் பல படங்களில் கவர்ச்சி படங்களில் நடித்திருக்கின்றார். இவர் சென்னை மதுரவாயில் அடுத்த கிருஷ்ணா நகரில் வசித்து வருகின்றார்.

நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் கையில் கத்தியுடன் நடிகை சோனாவின் வீட்டு சுவர் ஏரி குதித்து மிரட்டி இருக்கிறார்கள். பின்னர் வீட்டின் வளாகத்தில் வெளிப்புறமாக வைத்திருந்த ஏசி-யை திருடி செல்ல முயற்சி செய்து இருக்கிறார்கள். அப்போது சோனா வீட்டில் வளர்த்து வரும் நாள் மர்ம நபரை கண்டதும் பயங்கரமாக குறைத்துள்ளது. நாயின் சத்தத்தை கேட்டு வீட்டிற்குள் இருந்த நடிகை சோனா வெளியில் வந்திருக்கின்றார்.

அப்போது கையில் கத்தியுடன் மர்ம நபர் ஏசி இயந்திரத்தை திருட முயற்சி செய்வதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் திருடன் திருடன் என்று கத்தி கூச்சலிட்ட உடனே மர்ம நபர் கையில் இருந்த கத்தியை காட்டி நடிகை சோனாவை மிரட்டி விட்டு வெளியே மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்த நண்பருடன் தப்பு சென்று விட்டார்.

இதையடுத்து சோனா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து சோனாவிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 நபர்களை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Shankar praising Baththa movie poster.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் ஷங்கர்: சிறுவனின் நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதி!

Dhanush D56 movie production announcement poster.

126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!

Actor Suriya praising Dorothy movie poster.

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்தை பாராட்டித் தள்ளிய நடிகர் சூர்யா: படக்குழுவினருக்கு வாழ்த்து!

Jailer 2 movie censor debate poster.

சென்சார் சோதனையில் சிக்கிய ரஜினியின் ‘ஜெயிலர் 2’: ‘ஏ’ அல்லது ‘உ/ஏ’ சான்றிதழுக்காக நடக்கும் விவாதம் என்ன?

Nayanthara and director Ajay Gnanamuthu movie announcement poster.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படம்: ‘லோகா’ ஸ்டைலில் உருவாகும் பிரம்மாண்டத் திரில்லர்!

'டோரதி' தெலுங்கு வெளியீட்டுத் திரைப்படப் போஸ்டர்.

அக்டோபர் 2-ல் தெலுங்கில் ரிலீசாகும் கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’: மிரட்டலான தெலுங்கு டிரெய்லர் வெளியீடு!