விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் என்ன

விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் என்ன

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3ல் வெளிவருகிறது. இப்படத்தில் , கமல்ஹாசன், பகத்பாஸில், விஜய் சேதுபதி, போன்றோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை கமல் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ளனர். ஏனென்றால் இதற்கு முன் கமல் நடித்த படம் வெளிவந்து 3 வருடத்துக்கும் மேலாகி விட்டது.

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்த பிறகு தேர்தலில் கவனம் செலுத்திய அளவு இதில் கவனம் செலுத்தவில்லை. மேலும் சபாஷ் நாயுடு, இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் எல்லாம் என்ன ஆனது என்றே தெரியவில்லை இந்த சூழ்நிலையில் இந்த படம் ரிலீஸாகிறது.

இதில் சூர்யாவும் நடித்துள்ளார் ஆனால் அவரின் கதாபாத்திரம் என்ன என்று தெரியவில்லை. நாளை மறுதினம் அது தெரிந்து விடும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டுவிட்டியுள்ளார்.