Entertainment
பாடகர் கேகே மரணம்- பிரபலங்கள் இரங்கல்
தமிழில் மின்சாரக்கனவு படத்தின் மூலம் அறிமுகமானவர் கேகே. கிருஷ்ணகுமார் குன்னத் என்பது இவரின் பெயரின் முழு வடிவம் ஆகும். இவர் நேற்று (மே 31) கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த இசை நிகழ்ச்சி நடந்து முடிந்த சில நிமிடங்களில் பாடகர் கேகே திடீரென மரணம் அடைந்துள்ளார்.
இவர் உயிரின் உயிரே, பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது, கில்லி படத்தின் புகழ்பெற்ற பாடலான அப்படி போடு போன்ற புகழ்பெற்ற ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
கொல்கத்தா இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடிவிட்டு தான் தங்கி இருந்த ஹோட்டலுக்கு இவர் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அதற்குள் அவர் உயிரிழந்து விட்டார்.
இவரின் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல் இரங்கல் தெரிவித்துள்ளார். பன்மொழிகளிலும் பாடி ரசிகர்களை மகிழ்வித்த கேகே எனும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் அகால மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் ஆறுதல்கள் என கூறியுள்ளார்.
மேலும் பல பிரபலங்களும் இவரது மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.
