விவேக் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொன்ன விஜய்

விவேக் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொன்ன விஜய்

நடிகர் விஜய் சிறுவயதாக இருந்தபோதே அவர் அப்பா எஸ்.ஏசி இயக்கத்தில் நண்பர்கள், இன்னிசை மழை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மறைந்த நடிகர் விவேக். விஜய் மீது மிகுந்த பாசம் கொண்டவர் இவர்.

சமீபத்தில் மறைந்த விவேக்கின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் நடிகர் விஜய் கலந்து கொள்ள முடியாமல் இருந்தது.

விஜய் ஜார்ஜியாவில் நடந்த படப்பிடிப்பில் தனது 65வது படத்தில் நடிக்க சென்றிருந்தார்.

நேற்று விஜய் சென்னை திரும்பிய நிலையில் இந்நிலையில் நேற்று ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விஜய் இன்று விவேக்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இத்தகவலை அவரது மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது உறுதிப்படுத்தியுள்ளார்.