அழகர் கோவில் விழாவை இணையத்தில் காணலாம்

26

வருடா வருடம் சித்ரா பவுர்ணமி அன்று கள்ளழகர் அழகான பட்டுடுத்தி ஆற்றில் இறங்குவது வழக்கம்.கடந்த வருடம் கொரோனா காரணமாக அழகர் ஆற்றில் இறங்கவில்லை. இந்த வருடமும் அத்தகைய நிலையே நீடிக்கிறது. இருப்பினும் அழகர் வைகையாற்றில் இறங்காமல் அது போலவே செயற்க்கையாக செட்டப் செய்யப்பட்ட கோவில் வளாகத்தினுள் இறங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அழகர் கோவில் துணை ஆணையர் அனிதா இது குறித்து கூறியபோது,

கள்ளழகர் கோயில் மற்றும் உப கோயில்களில் ஏப். 26-ம் தேதி (திங்கள்கிழமை) முதல் பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லை. மேலும் தற்போது நடைபெற்றுவரும் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சி எவ்வித மாறுபாடுமின்றி தொடர்ந்து பக்தர்கள் அனுமதியின்றி கோயில் வளாகத்தினுள் நடைபெறும். பக்தர்கள் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகரை நேரில் தரிசிக்க அனுமதி இல்லை.

எனவே www.tnhrce.gov.in; www.alagarkoil.org என்ற இணையதள முகவரியிலும் youtube arulmigu kallalagar thirukkoil alagarkoil மற்றும் முகநூல் பக்கம் ஆகியவற்றில் நேரலையில் கள்ளழகரை தரிசிக்கலாம். கோயில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் பங்களிப்புடன் அரசு வழிகாட்டுதலை பின்பற்றி திருவிழா தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாருங்க:  கலியுகத்திற்கு பின் உலகம் அழிந்து விடுமா
Previous articleவிவேக் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொன்ன விஜய்
Next articleஅந்தகானில் சிம்ரன் நடிக்கும் துணிச்சலான வேடம்