தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனைத்து கட்சியும் ஒப்புதல்

22

தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூடு மற்றும் பெருங்கலவரத்தில் 13 பேர் பலியானார்கள். ஸ்டெர்லைட் ஆலையால் நச்சுக்கழிவு வெளியேறுகிறது கேன்சர் வருகிறது என மக்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி வந்த நிலையில் பெரும் கலவரம் ஏற்பட்டதால் அது மூடப்பட்டது.

தற்போது கொரோனா பிரச்சினையால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தருகிறோம் எங்கள் ஆலையை திறக்க அனுமதி தாருங்கள் என கேட்டிருந்தது.

முதலில் இதற்கு கடும் எதிர்ப்பு நிலவிய நிலையில் தற்போது நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலையை திறக்க திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

பாருங்க:  நவம்பர் முதல் மெரினா கடற்கரை திறக்க வாய்ப்பு
Previous articleகார்த்தி நடிக்கும் சர்தார்
Next articleவிவேக் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொன்ன விஜய்