Bigg Boss Tamil 3

கஸ்தூரியை வஞ்சம் தீர்த்த வனிதா விஜயகுமார் – வீடியோ பாருங்க

Published on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் கஸ்தூரியை மறைமுகமாக டார்கெட் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

தற்போது பிக்பாச் சீசன் 3 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அபிராமி, சாக்‌ஷி, மதுமிதா என பலரும் வெளியேறியுள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்து வருகிறது. போதா குறைக்கு வனிதா விஜயகுமாரும் மீண்டும் உள்ளே வந்துவிட நிகழ்ச்சி பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

கடந்த சனிக்கிழமை கமல் வந்த போது ‘வீட்டில் பிரச்சனைகள் அதிகாகியுள்ளதே’ என கேட்டார். அதற்கு நடிகை கஸ்தூரி ‘ வத்திக்குச்சு வீட்டிற்குள் வந்துடுச்சு இல்ல.. அதான் சார்’ என வனிதா விஜயகுமாரை சீண்டினார்.

இது வனிதாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இதை மனதில் வைத்து ஆசிரியை – மாணவர்கள் டாஸ்கில் ‘ஆசிரியை மன்னிப்பு கேட்க வேண்டும்’ என வனிதா அடம்பிடிக்கும் காட்சிகள் இன்றைய புரமோ வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

Trending

Exit mobile version