மீண்டும் என்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின்

மீண்டும் என்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின்

நடிகை மீரா ஜாஸ்மின் இன்ஸ்டாகிராமில் தனது பெயரில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார். இதற்கு ரசிகர்கள் மற்றும் சக நடிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் மலையாள திரைப்படங்களில் முன்னணி நாயகியாக திகழ்ந்த நடிகை மீரா ஜாஸ்மின், 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.

பத்தாண்டுகளாக சினிமாவில் இருந்து விலகியிருந்த அவர், சென்ற வருடம் மீண்டும் நடிப்புக்கு திரும்பினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்தியன் அந்திக்காடின் புதிய படத்தில் மீரா ஜாஸ்மின் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தொடர்ந்து நடிக்க அவர் முடிவு செய்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நடிகர் ஜெயராம் உடன் இணைந்து நடிக்கும் மகள் படத்தின் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் முதல் பதிவாக மீரா ஜாஸ்மின் பகிர்ந்துள்ளார்.  மேலும், மீரா ஜாஸ்மின் கணக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே 23,000 க்கும் அதிகமானோர் ஃபாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமின்றி ரவி தேஜா, மோகன்லால் போன்ற சில நட்சத்திரங்களின் கணக்கை மீரா ஜாஸ்மின் ஃபாலோ செய்துள்ளார்.