Latest News
தரமற்ற பொங்கல் பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை- முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
சமீபத்தில் பொங்கலுக்காக வழங்கப்பட்ட தொகுப்புகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் இருந்தன என குற்றச்சாட்டு எழுந்தது. மிளகுக்கு பதில் இலவம் பஞ்சு விதை, உருகிய வெல்லம் போன்றவை வழங்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திமுக அரசு மீதும் அதிருப்தி எழுந்த நிலையில் அமைச்சர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நமது அரசு தரமாக வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில், சிலர் சில இடங்களில் குளறுபடிகளைச் செய்தனர். இந்தப் புகார்கள் எழக் காரணமான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களைக் கருப்புப் பட்டியலில் சேர்க்க அறிவுறுத்தியுள்ளேன் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
