---Advertisement---

கட்டணமில்லா பயணம்…சலுகை அறிவித்த ஸ்டாலின்… நன்றி சொன்ன தென்னிந்திய நடிகர் சங்கம்!…

Published on: June 29, 2024
south indian actor association
---Advertisement---

நடிகர், நடிகையருக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வுகளை பெற்றுத்தரும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது தென்னிந்திய நடிகர் சங்கம். இதன் மூலம் பலரின் புகார்களுக்கும் முடிவுகள் எட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. 1951ம் ஆண்டு முதல் இந்த சங்கமானது செயல்பாட்டில் இருந்து வருகிறது.

முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட போது இதன் தலைவராக டி.வி.சுந்தரம் இருந்து வந்தார். துணைத் தலைவராக எம்.ஜி.ஆர். இருந்திருக்கிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படும். இப்போது மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் இதில் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடிகர் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த முறை நடப்பட்ட தேர்தலில் நடிகர் நாஸர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் தான் இப்போது இந்த சங்கத்தின் செயல்பாடுகள் நடந்து வருகிறது. சங்கத்தின் பொதுச்செயலாளராக நடிகர் விஷாலும், பொருளாளராக நடிகர் கார்த்தி சிவகுமாரும் இருந்து வருகின்றனர். மறைந்த கேப்டன் விஜயகாந்த் இந்த சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்துள்ளார்.

நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்கு முன்னனி நடிகர்கள் உட்பட அனைவரையும் ஒன்று திரட்டி மாபெரும் நட்சத்திர கலை நிகழ்ச்சியை நடத்தி சாதனை புரிந்தார். நாஸர் தலைமையிலான தென்னிந்திய நடிகர் சங்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளது. ‘கலைமாமணி’ விருது பெற்ற கலைஞர்கள் தமிழக அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்க சலுகையை ஸ்டாலின் அறிவித்தார். ‘கலைமாமணி’ கலைஞர்களுக்கு இந்த சலுகையை அறிவித்துள்ள தமிழக அரசிற்கு   தென்னிந்திய நடிகர் சங்கம் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டது.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Shiva announcing the upcoming schedule for the comedy film Tamizh Padam 3.

“தமிழ் படம் 3′ அப்டேட்: அடுத்த மாதம் தொடங்கும் ஷூட்டிங் – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சிவா!

மருத்துவமனையில் இருந்து திரும்பிய மூத்த நடிகை டிஸ்கோ சாந்தியின் சமூக வலைதளப் பதிவு.

Disco Shanthi Hospitalised: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய மூத்த நடிகை!

Official promotional poster for the sports docu-drama Gladiator featuring Ajith Kumar and Thalapathy Vijay.

அஜித் – விஜய் இணையும் ‘கிளாடியேட்டர்’ ஆவணப்படம்: நவம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!

Official audio and trailer launch announcement poster for Sundeep Kishan's Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: சென்னையில் பிரம்மாண்டமாக வெளியாகும் இசை மற்றும் டிரெய்லர்!

Theatrical release banner for Vemal and Shriya Saran's long-delayed film Sandakari.

“சண்டக்காரி’ ரிலீஸ் அப்டேட்: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு திரைக்கு வரும் விமல் – ஸ்ரேயா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Promotional banner highlighting the record-breaking streaming numbers of the film Youth.

‘யூத்’ படத்தின் சாதனை இசை: ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப்பில் மியூசிக் ஆல்பம் மெகா சாதனை!