சினிமா துறை நட்சத்திரங்கள் அவர்களின் ரசிகர்களுக்கு நாட்டின் நிலவரத்திரிக்கு ஏற்றாற்போல் அவ்வப்போது பல்வேறு கருத்துக்களை பகிர்வர். இப்போதிருக்கும் நிலவரப்படி, கொரோனா வைரஸ் தான் உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, உலக தலைவர்கள், பல்வேறு துறை பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் என கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை தங்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் நடிகையான சோனாக்க்ஷி சின்ஹா தனது ட்விட்டரில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “உலகம் # கொரோனா வைரஸுடன் போரிடுகையில், சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதன் மூலம் தொற்றுநோய்க்கு நாம் சேர்க்காமல் இருப்பதை உறுதி செய்வோம். பாதுகாப்பாக இருங்கள், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள், மேலும் பொறுப்பாகவும் இருங்கள். பிதீகளை சேர்க்க வேண்டாம்” என்று தன் ரசிகர்களுக்கு உருக்கமான செய்தியை ட்வீட் செய்துள்ளார்.
https://twitter.com/sonakshisinha/status/1238367413655097344









