---Advertisement---

சித்தார்த்துக்கு சென்னை காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது

Published on: January 20, 2022
---Advertisement---

கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி பஞ்சாப் சென்றிருந்தபோது, பிரதமர் மோடியை விவசாயிகள் வழிமறித்து போராட்டம் நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

நாட்டின் பிரதம மந்திரி செல்லும் பாதையில் விவசாயிகள் போராட்டம் நடத்தியது மிகுந்த அதிர்ச்சியை அனைவருக்கும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நோவலும் இது குறித்து கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இந்த கருத்தை எதிர்த்து நடிகர் சித்தார்த் சாய்னா நோவலுக்கு பதில் தெரிவிக்கையில் ஆபாசமாக கருத்து தெரிவித்திருந்தார்.

நாடெங்கும் இந்த கருத்து பரபரப்பான நிலையில் சித்தார்த் மீது பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இறுதியில் சித்தார்த் மன்னிப்பு கேட்டும் விட்டார்.

இருப்பினும் சென்னை காவல்துறை சித்தார்த்துக்கு இவ்விவகாரம் குறித்து பதிலளிக்க சம்மன் அனுப்பியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.