---Advertisement---

முடிந்தால் கைது செய்யுங்கள்…சவால் விட்ட சீமான்…

Published on: July 11, 2024
Seeman
---Advertisement---

 

நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரும், யூ-டியூபருமான ‘சாட்டை’துரைமுருகன் தொடர்ந்து ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசையும், அந்த கட்சியையும் எதிர்த்து வருகிறார். மேடைகளில் பேசும் போது அதிகமாக இவர்களை பற்றியே பேசி வருகிறார். இந்நிலையில் இன்று ‘சாட்டை’துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது சம்பவத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இன்று  காலை பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த சீமான் தமிழகத்தை ஆளும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசை கடுமையாக சாடினார்.

Saattai Duraimurugan
Saattai Duraimurugan

தமிழக முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான கருணாநிதி குறித்து பாடலை பாடியிருந்திருக்கிறார் ‘சாட்டை’ துரை முருகன்.

பாடலில் கருணாநிதியை பற்றி அவதூராக குறிப்பிட்டதாக ‘சாட்டை’துரைமுருகன் கைது செய்யப்பட்டார். இது குறித்து பேசிய சீமான் யாரோ ஒருவர் எழுதிய பாடலை, யாரோ ஒருவர் பாடிய பாடலை தான் துரை முருகன் திரும்பப் பாடியுள்ளார். இந்த கைது நடவடிக்கை முற்றிலும் தவறானதாக சொல்லியிருந்தார் சீமான்.

பேட்டியின் நடுவே கைது செய்யப்பட காரணமாக இருந்த பாடலை சீமான் பாடி முடிந்தால் என் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் என்றார். அதோடு  தன்னை கைது செய்ய முடியுமா? என அரசுக்கு சவால் விட்டார்.

தமிழகத்தில் அடிக்கடி கொலை சம்பவங்கள் நடந்து வருகிறது. அதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யாமல் அவசர அவசரமாக சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளனர் என அரசை குற்றம் சாட்டி கேள்விகளையும் எழுப்பியுள்ளார் சீமான்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Shiva announcing the upcoming schedule for the comedy film Tamizh Padam 3.

“தமிழ் படம் 3′ அப்டேட்: அடுத்த மாதம் தொடங்கும் ஷூட்டிங் – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சிவா!

மருத்துவமனையில் இருந்து திரும்பிய மூத்த நடிகை டிஸ்கோ சாந்தியின் சமூக வலைதளப் பதிவு.

Disco Shanthi Hospitalised: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய மூத்த நடிகை!

Official promotional poster for the sports docu-drama Gladiator featuring Ajith Kumar and Thalapathy Vijay.

அஜித் – விஜய் இணையும் ‘கிளாடியேட்டர்’ ஆவணப்படம்: நவம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!

Official audio and trailer launch announcement poster for Sundeep Kishan's Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: சென்னையில் பிரம்மாண்டமாக வெளியாகும் இசை மற்றும் டிரெய்லர்!

Theatrical release banner for Vemal and Shriya Saran's long-delayed film Sandakari.

“சண்டக்காரி’ ரிலீஸ் அப்டேட்: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு திரைக்கு வரும் விமல் – ஸ்ரேயா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Promotional banner highlighting the record-breaking streaming numbers of the film Youth.

‘யூத்’ படத்தின் சாதனை இசை: ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப்பில் மியூசிக் ஆல்பம் மெகா சாதனை!