---Advertisement---

டிக்கெட் புக்கிங் பிசினஸை கையில் எடுத்த Zomato நிறுவனம்… விரைவில் வரும் புதிய அம்சம்…!

By Sri
Published on: August 28, 2024
---Advertisement---

இந்தியாவில் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமாக விளங்கும் சொமேட்டோ நிறுவனம் சினிமா டிக்கெட் முன்பதிவு தொழிலில் கால் பதித்திருக்கின்றது. சொமேட்டோ நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன் லிமிடெட் நிறுவனம் பிரபல ஆன்லைன் பரிவர்த்தனை செயலியான பேடிஎம்டன் இணைந்து சினிமா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் டிக்கெட் முன்பதிவு பிசினஸ் கட்டமைப்பை வாங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இந்த பரிவர்த்தனையும் முடிவடைந்து வரும் செப்டம்பர் 30 முதல் zomato செயலியின் மூலம் டிக்கெட் புக்கிங் சேவை தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த செயலில் அறிமுகமாகும்book now, sell anytime என்ற அம்சத்தின் மூலம் சினிமா விளையாட்டு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

Zomato இந்த கட்டமைப்பை வாங்கி இருந்தாலும் பயனர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் அடுத்த 12 மாதங்களுக்கு பேடிஎம் செயலிலும் டிக்கெட் முன்பதிவு நடைபெறும் என்று ஒன் 97 கம்யூனிகேஷன் தெரிவித்து இருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க