---Advertisement---

சேலம் பட்டாசு வெடி விபத்து… நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின்…!

By Sri
Published on: September 4, 2024
---Advertisement---

சேலம் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த நபருக்கு 3 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கின்றார்.

சேலம் மாவட்டம், வீராணம் அருகே உள்ள கோமாளி வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் வெள்ளியம்பட்டி காட்டுவளவு பகுதியில் அரசு அனுமதி பெற்று பட்டாசு ஆலை ஒன்றை நடத்தி வருகின்றார். அதே பகுதியில் தனியாக 5 இடங்களில் பட்டாசு ஆலை சிறிய அளவில் வைத்து நடத்தி வருகின்றார்.

இந்த ஆலையில் பட்டாசு மருந்து மூட்டையை கீழே இறக்கியபோது ஏற்பட்ட உரைசல் காரணமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் ஜெயராமன் படுகாயங்களுடன் உயிரிழந்தார். 4 பேர் எங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் வெடி விபத்தில் உயிரிழந்த ஜெயக்குமாரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக தெரிவித்திருந்ததாவது: “சேலம் மாவட்டம், குப்பனூர் கிராமம் வெள்ளியம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 10 மணி அளவில் நிகழ்ந்த வெடி விபத்தில் ஜெயராமன் என்பவர் உயிரிழந்திருக்கின்றார் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இந்த விபத்தில் சேலம் வட்டம் சின்னலூரை சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் சிவகாசியை சேர்ந்த முத்துராஜா ஆகிய இருவர் பலத்த காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டிருக்கின்றேன்.

வெடி விபத்தில் உயர்ந்த ஜெயராமன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் வழங்கிடவும் காயமடைந்த இரு நபர்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்திருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

சர்தார் 2 பட விழாவில் பேசிய நடிகர் கார்த்தி மற்றும் மாலவிகா மோகனன்.

Karthi Faces Severe Backlash: ‘மாலவிகாவை அப்படி எதிர்பார்த்தேன்’ – மோனிகா பெல்லூச்சி ஒப்பீட்டால் இணையத்தில் வெடித்த விவாதம்!

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!