தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் நீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் மேற்கு பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில் ரவு ஸ்டடி சர்க்கிள் என்கின்ற ஐஏஎஸ் அகாடமி மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தின் தரைப்பகுதியில் தண்ணீர் புகுந்ததால் அங்கு படித்து வந்த 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர்கள் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
நேற்று இரவு 7 மணி அளவில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு படித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது தரைத்தளத்தில் திடீரென்று மழை நீர் புகுந்துள்ளது. தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரில் தத்தளித்த மாணவர்களை விரைந்து மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் துரதிஷ்டவசமாக இரண்டு மாணவிகளும் ஒரு மாணவரும் உயிரிழந்தார்.
இதனால் நேற்று நள்ளிரவு முதல் பயிற்சி மைய கட்டிடத்திற்கு முன்பாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்து சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கின்றார். இந்த சம்பவத்தை உள்கட்டமைப்பின் கூட்டு தோல்வி என்று கூறிய ராகுல் காந்தி ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பும் அரசாங்கத்தின் பொறுப்பு என்று தெரிவித்திருந்தார்.
மேலும் டெல்லியில் உள்ள கட்டிடத்தின் அடித்தளத்தில் தண்ணீர் தேங்கியதால் மாணவர்கள் உயிரிழந்தது மிக துரதிஷ்டவசமானது. சில நாட்களுக்கு முன்பு மழையின் போது மின்சாரம் தாக்கி மாணவர்கள் உயிரிழந்தார்கள். பாதுகாப்பற்ற கட்டடம், மோசமான நகரத்திட்டமிடல், நிர்வாகங்களின் பொறுப்பற்ற தன்மை என ஒவ்வொரு நிலையிலும் சாமானிய குடிமகன் தன் உயிரை இழப்பதன் மூலம் விலை கொடுத்து வருகின்றது. பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்க்கை ஒவ்வொரு குடிமகனின் உரிமை மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பு என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.







