வங்க கடலில் ஏற்பட்டுள்ள புரவி புயல் வழு இழந்துவிட்டது. இதனால் தமிழகமெங்கும் மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. வட தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.
சிதம்பரம் கோவிலுக்குள்ளே கடும் தண்ணீர் உள்ளே சென்றுள்ளது. இந்நிலையில் பாம்பன் அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ராமநாதபுரம் தூத்துக்குடி வழியாக தெற்கு கேரள பகுதியை அடையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் ஒரே இடத்தில் நகராமல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம் கொண்டுள்ளதால் அது நகர்ந்த பிறகே மழை பொழிவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.













