---Advertisement---

புனே விமான நிலையம் இனி துக்காராம் மகாராஜ் விமான நிலையம்… பெயர் மாற்றம் செய்த மகாராஷ்டிரா அரசு…!

By Sri
Published on: September 24, 2024
---Advertisement---

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே விமான நிலையம் இனி துக்காராம் மகாராஜ் விமான நிலையம் என அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே சர்வதேச விமான நிலையத்தின் பெயரை ஜகத்குரு சந்த்ஸ்ரேஸ்தா துக்காராம் மகாராஜ் புனே சர்வதேச விமான நிலையம் என பாஜக அரசு மாற்றம் செய்துள்ளது. நேற்று நடைபெற்ற மராட்டிய அரசின் அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மராட்டிய வரலாற்றில் 17வது நூற்றாண்டை சேர்ந்த இந்து மத துறவியான துக்காராம் பக்தி கவிதைகள் மற்றும் கீர்த்தனைகள் எனப்படும் பக்தி பாடல்களால் நன்கு அறியப்படுபவர். எனவே அவரது பெயரை புனே விமான நிலையத்திற்கு சூட்டி கவுரவிக்க மராட்டிய அரசு முடிவு எடுத்து இருக்கின்றது.

மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த பெயர் மாற்றம் பாஜக கூட்டணி அரசின் முக்கிய நகர்வாக பார்க்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்த பெயர் மாற்றத்திற்கு பலரும் வரவேற்பு கொடுத்துள்ளனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  தீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்... 5 வயது சிறுமி உயிரிழப்பு..!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!