---Advertisement---

இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஷேக் ஹசீனா… வங்கதேசத்தில் புதிய அரசு பதவியேற்பு…!

By Sri
Published on: August 6, 2024
---Advertisement---

வங்கதேச பிரதமர் சேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், அங்கு புதிய அரசு பதவி ஏற்க உள்ள தகவல் வெளியாகி இருக்கின்றது. வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு வழங்கப்படுவது பாரபட்சம் காட்டுவது போல் இருப்பதாக கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமாக மாறியது.

இதுவரை 300-க்கும் மேற்ப நபர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த வன்முறை நாளுக்கு நாள் தீவிரமடைந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற வன்முறையில் ஒரே நாளில் 100 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் போராட்டக்காரர்கள் மேலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று ஷேக் ஹசீனாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்டனர்.

வீட்டுக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் சூறையாடினர். தனது அரசுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வந்த காரணத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து இந்தியாவில் அவர் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ராணுவ விமான மூலம் டெல்லி ஹண்டன் விமான நிலையத்திற்கு வந்தடைந்த இவர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விவரங்களை கேட்டறிந்தார். இதனிடையே வங்கதேசம் விவகாரம் தொடர்பாக இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகின்றது. வங்கதேசத்தில் தற்போது ராணுவ ஆட்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு ராணுவ தலைவர் ஜெனரல் வாக்கர் ஜமான் வங்கதாஸ் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார். அமைதியை கடைபிடிக்கும்படி போராட்டக்காரர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். வங்கதேசத்தில் சலிமுல்லா கான் மற்றும் ஆசிஃப் நஸ்ருல் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பு ஏற்பதாக தகவல் வெளியாகியது. இன்று இடைக்கால அரசு பொறுப்பேற்கும் எனவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.