---Advertisement---

பொது இடத்தில் மது அருந்துபவர்களா- இனி அவ்ளோதான் போலீஸ் நடவடிக்கை

Published on: September 16, 2021
---Advertisement---

தமிழ்நாட்டில் மது அருந்தும் நபர்கள் செய்யும் ஒரு காரியம் பொது இடத்தில் உட்கார்ந்து மது அருந்துவது. இது போல தவறான காரியத்தை தமிழ்நாட்டின் அனைத்து  ஊர்களிலும் உள்ள குடிமகன்கள் கொஞ்சம் கூட நாகரீகமின்றி செய்து வருகின்றனர்.

பல வயல்வெளிகள், மார்க்கெட் அருகில் உள்ள குட்டிசந்துகள், கோவில்கள் அருகில், டாஸ்மாக் அருகில் உள்ள வயல்வெளிகள், ஏரிக்கரைகள், காடுகள் என இந்த மதுகுடிப்பவர்கள் குடித்து விட்டு ரகளை செய்வதும் வெட்டவெளியில் உட்கார்ந்து மது அருந்துவதும் தொடர்ந்து வருகிறது.

இதனால் அமைதியானவர்கள், பெண்கள், குழந்தைகள் முக்கியமான இடங்களுக்கு செல்வதற்கு அச்சப்படும் சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில், சேலம் மாநகர காவல்துறை சார்பில் டாஸ்மாக் கடை அருகில், ’பொது இடங்களில் மதுஅருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் தண்டிக்கப்படுவீர்கள்’ என எச்சரிக்கை அறிவிப்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், பொது இடங்களில் மதுஅருந்துவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து, டாஸ்மாக் கடை அருகில் உள்ள திறந்தவெளிகளில் மது அருந்துவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக பொதுமக்களில் சிலர் கூறும்போது, “மாநகர போலீஸார் எடுத்துள்ள நடவடிக்கையால், டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதிகளை அச்சமின்றி கடந்து செல்ல முடிகிறது. இந்த கண்காணிப்பு நடவடிக்கையை மாவட்டம் முழுவதும் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த வேண்டும்” என்று கூறுகின்றனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?