---Advertisement---

பரிசுத் தொகையை பங்கு பிரித்து கொடுத்த பிசிசிஐ!…யாருக்கு எவ்வளவு தெரியுமா?…

Published on: July 9, 2024
BCCI
---Advertisement---

2007ம் ஆண்டிற்கு பிறகு இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று அசத்தியது இந்திய அணி. அமெரிக்க, மேற்கு இந்தியத் தீவுகளில் சமீபத்தில் நடந்து முடிந்தது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள். ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இதில் பங்கேற்றது.

எதிரணிகளுக்கு கடும் நெருக்கடி தரக்கூடிய அணிகளாக கருதப்படும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அபாயகரமான அணியாக பார்க்கப்படும் மேற்கு இந்தியத் தீவுகள் போன்ற அணிகள் அரை இறுதி போட்டிகளுக்கு கூட தகுதி பெறாமல் தொடரிலிருந்து வெளியேறியது.

கத்துக்குட்டி அணியாக பார்க்கப் பட்ட ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதி வரை முன்னேறி அதிர்ச்சி கொடுத்தது. சர்வதேச உலகக் கோப்பை போட்டிகளில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்க அணி.

இப்படி பல விதமான திருப்பங்களை சந்தித்தது நடந்து முடிந்த 2024 இருபது ஓவர் உலகக் கோப்பை.

T20 World Cup
T20 World Cup

பலமிக்க தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்ட இந்திய அணி கடைசி ஓவர் வரை அபாரமாக ஆடி கோப்பையை வென்றது. கோப்பையோடு தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக அணி வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அதிகபட்ச தொகையாக 125கோடி ரூபாயை பரிசாக அளித்தது இந்திய கிரிக்கெட் வாரியம்.

இந்த நூற்றி இருபத்தி ஐந்து கோடி ரூபாயில் யார் யாருக்கு எவ்வளவு என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட பதினைந்து வீரர்களுக்கு 5 கோடி ரூபாயும், அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்கும் ஐந்து கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல உதவியாளர்கள், பிசியோதெரபிஸ்ட், ட்ரெயினர்களுக்கு இரண்டு கோடி ரூபாயும், ரிசர்வ் வீரர்களுக்கு நாலு கோடி ரூபாயும், தேர்வுக் குழுவினருக்கு தலா ஒரு கோடி என பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'பத்தா' படத்தின் 'ஊரோட ஒத்த டான்' பாடலின் அதிகாரப்பூர்வ விளம்பரப் போஸ்டர்.

மக்களின் இசையில் கலக்கும் ‘பத்தா’ படத்தின் இரண்டாவது சிங்கிள்: விஜய் சேதுபதியின் ‘ஊரோட ஒத்த டான்’ பாடல் வெளியீடு!

Promotional poster for Ashok Selvan and Preity Mukundan's Anbil Avan.

அக்டோபர் 2-க்கு ஒத்திவைக்கப்பட்ட ‘அன்பில் அவன்’: அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Collaborative file photo of Nanjil Vijayan and Vaishu.

மனக்கசப்புகள் நீங்கி ஒன்றுபட்ட நாஞ்சில் விஜயன் – வைஷு: சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் சமாதானம்!

'மகாவீர் கர்ணா' திரைப்படத்தின் மிரட்டலான முதல் தோற்றப் போஸ்டர்.

மகாபாரதத்தின் மாவீரன் கர்ணன் முதல் தோற்றம்: இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மகாவீர் கர்ணா’!

Epic promotional poster for Vijay Deverakonda's Ranabaali.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியாகும் ‘ரணபலி’: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் சரித்திரப் படம்!

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!