கடந்த 1999ம் ஆண்டு வெளிவந்த கண்ணோடு காண்பதெல்லாம் என்ற படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் பிரபு சாலமன். முதல் படமே வித்தியாசமான கதை என்றாலும் அது இவருக்கு பெரிய பெயரை பெற்றுத்தரவில்லை.
பின்பு கிங், கொக்கி, லாடம் என பல்வேறு வகையான படங்களை இயக்கி பார்த்தார். எல்லா படத்திலும் வித்தியாசமான கதைதான் ஆனால் எந்த படமும் ஆரம்ப காலங்களில் இவரை உயர்த்தவில்லை.
இவர் இயக்கிய மைனா திரைப்படம்தான் பெரிய வெற்றியை பெற்றது அதன் மூலம் இவருக்கு பெரிய பெயர் கிடைத்தது.
தொடர்ந்து கும்கி,கயல், தொடரி என பல படங்களை இயக்கி வெற்றி பெற்று முன்னணி இயக்குனரானார்.
இப்போது இவர் விஷ்ணு விஷாலை வைத்து ஒரு ஆக்சன் த்ரில்லர் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கி வருகிறார். காடன் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் காடு சார்ந்த த்ரில்லர் கதையை அடிப்படையாக கொண்டது. தற்போதைய கொரொனா பிரச்சினைகளால் இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாம் இதை விஷ்ணுவிஷாலே அறிவித்துள்ளார்.







