---Advertisement---

சென்னையில் மின்தடை ஏற்பட்டது ஏன்…? மின்வாரியம் கொடுத்த விளக்கம்…!

By Sri
Published on: September 13, 2024
---Advertisement---

சென்னையில் நேற்று மணலில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. இது குறித்து மின்வாரியம் விளக்கம் கொடுத்துள்ளது.

சென்னை மணலியில் இயங்கி வரும் துணை மின் நிலையத்தில் நேற்று இரவு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து கட்டுப்பாட்டு அறையில் 400க்கு 23 கிலோ வாட் மின்சார பாதையிலும் திடீர் பழுது ஏற்பட்டது. கட்டுப்பாட்டு அறையில் உயர் அழுத்த மின்வழித்தடத்தில் ஏற்பட்ட லேசான உரைவு அதை தொடர்ந்து எழுந்த தீப்பொறிகளுமே தீ விபத்துக்கு காரணம் என கூறப்பட்டது.

இந்த பழுதின் எதிரொலியால் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 10 மணியளவில் மின்வெட்டு ஏற்பட்டது. அதன்படி சென்னை எழும்பூர், வேப்பேரி, பெரியமேடு, சென்ட்ரல், மந்தைவெளி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை, சேப்பாக்கம், அண்ணாசாலை, சைதாப்பேட்டை, நந்தனம், பெருங்குடி, தியாகராய நகர், சூளைமேடு, வில்லிவாக்கம் , அயப்பாக்கம், திருமுல்லைவாயில், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கினர்.

வடசென்னை பகுதிகள் முழுவதுமே இருளில் மூழ்கியது. இதனால் நேற்று இரவு தூக்கத்தை தொலைத்து மக்கள் திண்டாடி வந்தார்கள். அனைவரும் மின் நிலையங்களுக்கும், மின்னக கட்டுப்பாட்டு அறை எண்ணையும் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்து வந்தார்கள். முக்கியசாலைகளும் இருளில் மூழ்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தார்கள். அதுமட்டுமில்லாமல் மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  First Look of 'Medical Miracle' Unveiled: Sangeeth Prathap's Unique Debut Captivates Fans

குறிப்பாக சிந்தாதிரிப்பேட்டை மயிலாப்பூர் இடையேயான பறக்கும் ரயில் நிலையங்கள் அனைத்துமே மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் இருளில் மூழ்கியது. இருள் சூழ்ந்திருந்தது காரணமாக ரயில்கள் மெதுவாக இயங்கின பயணிகள் செல்போன் வெளிச்சத்திலேயே ரயில்களை பயணம் செய்தார்கள். சில மணி நேரத்தில் மின்வெட்டு சரி செய்யப்பட்டது. மின்வெட்டால் நேற்று இரவு மக்கள் கடுமையாக பாதிப்படைந்தார்கள் .

இந்நிலையில் நேற்று இரவு ஏற்பட்ட மின்தடைக்கான காரணம் குறித்து மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில் அவர்கள் தெரிவித்திருந்ததாவது ‘அலமாதி மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. தீ விபத்தால் மின் ஆதாரங்கள் செயல் இழந்ததால் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டன. சென்னையில் ஏற்பட்ட மின்தடை போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 100% சரி செய்யப்பட்டு இருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Nani and director Prem Kumar's new movie project.

நானி – ’96’ பிரேம் குமார் கூட்டணியில் உருக்கம் நிறைந்த காதல் கதை: ஹீரோயினாக ருக்மிணி வசந்த்?

Editorial visual featuring the shoot wrap of Dayangaram.

ஷூட்டிங் முடிந்த கையோடு வெளியாகும் விஜே சித்துவின் ‘டயங்கரம்’: டிசம்பரில் தியேட்டர் ரிலீஸ்!

Editorial visual featuring the censor delay for Karathey Babu.

அரசியலை அதிரவைக்கும் ‘கராத்தே பாபு’: சென்சார் போர்டு கெடுபிடியால் 2027-க்கு தள்ளிப்போகும் ரிலீஸ்?

Editorial visual featuring Rashmika Mandanna meeting Chief Minister Vijay.

“ஃபேன் கேர்ள் டூ சிஎம்!”: முதல்வர் விஜயை நேரில் சந்தித்து நெகிழ்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the announcement of Suhas's bilingual film Hide And Silk.

சூரி வாழ்த்து தெரிவித்த சுஹாஸின் புதிய இருமொழிப் படம் ‘ஹைட் அண்ட் சில்க்’: தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ்!

'ஜெயிலர் 2' பட டிக்கெட் முன்பதிவு குறித்த செய்திப் படம்.

ஜெயிலர் 2 டிக்கெட் விலை விவகாரம்: பெங்களூரில் ரூ.2000, சென்னையில் எவ்வளோ தெரியுமா?