---Advertisement---

காவல் ஆய்வாளரை பார்த்தால் துள்ளி வரும் பசு

Published on: October 26, 2020
---Advertisement---

பாவப்பட்ட பரிதாப ஜீவன்கள்தான் வாயில்லா ஜீவன்களாக கருதப்படும் கால்நடைகள், ஆடு, மாடு, நாய், குரங்கு போன்றவற்றுக்கு இருக்கும் ஒற்றுமை, பாசம் நல்ல குணங்கள் பல மனிதர்களுக்கு இல்லை. இருப்பினும் தூய மனதுடைய மனிதர்கள் விலங்குகளிடம் பாசம் காட்டும் மனிதர்கள் பலர் இவ்வையகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் மேலுர் டவுன் இன்ஸ்பெக்டர் சார்லஸ் என்பவர் அந்த பகுதியில் உள்ள பசுமாடுகளுக்கு பழம் உள்ளிட்ட உணவுகளை தினம் தோறும் கொடுத்து வந்துள்ளார்.

அதனால் அந்த பசுமாடுகள் இருக்கும் மேலூர் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வந்தாலே பசுமாடு ஒன்று அவரை தேடி வந்து பாசம் காட்டுகிறது அவரிடம் உணவு பெற்று செல்ல துடிக்கிறது.

கோவில் பசு ஒன்று ஆனந்தத்தில் துள்ளி குதித்தவாறு வாகனத்தை நோக்கி ஓடி வருகிறது. உடனடியாக வாகனத்தை நிறுத்தும் ஆய்வாளர் திரு சார்லஸ் அவர்கள் வாழைப்பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்றவற்றை பசுவுக்கு வழங்கி வருகிறார்.
மேலும் அவர் கொடுக்கும் உணவை நிதானமாக உண்டபின் அந்த பசு நன்றி தெரிவிப்பது போல அவரது கையை நாக்கால் வருடிக் கொடுத்து விட்டு பின் அந்த இடத்தை விட்டுச் செல்கிறது.

இன்ஸ்பெக்டர் சார்லசுக்கும் பசுவுக்கும் உண்டான இந்த பாசம் பலரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement poster of Anbu Scholarship 2026 by Hiphop Tamizha and Sathyabama University.

Education for All: “மே 17-க்குள் விண்ணப்பியுங்கள்!” — அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘அன்பு ஸ்காலர்ஷிப்’ வழங்கும் ஹிப்ஹாப் தமிழா!

Screenshot of CMO Tamil Nadu social media statistics showing massive increase in followers after Vijay became CM.

Digital Revolution: “15 லட்சம் ஃபாலோயர்கள்.. 14 லட்சம் வியூஸ்!” — இணையதளத்தை அதிர வைக்கும் முதலமைச்சர் விஜய்யின் அதிகாரப்பூர்வ பக்கங்கள்!

Actor Jai speaking in the style of CM Vijay at a movie event with a bold Tamil quote.

Junior Thalapathy Vibes: “சிஎம் விஜய் போலவே பேச்சு!” — மேடையில் ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என அதிரடி காட்டிய நடிகர் ஜெய்!

Superstar Rajinikanth walking away from media microphones during an interaction in Chennai.

The Silent Superstar: “விஜய் பற்றி கேள்வி.. மௌனம் காத்த ரஜினி!” — சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய ரஜினிகாந்தின் ரியாக்‌ஷன்!

Actress Vanitha Vijayakumar speaking about self-respect and relationships in a recent interview.

Bold & Independent: “நிம்மதி இல்லையென்றால் விலகிவிடுங்கள்!” — சுயமரியாதை குறித்து வனிதா விஜயகுமார் வெளியிட்ட அதிரடி கருத்து!

A high-intensity cinematic still of Actor Vijay from the movie 'The GOAT' (The Greatest of All Time).

Reel meets Real: “எல்லாரும் ஒழுங்கா இருங்க.. சிஎம் ஸ்ட்ரிக்ட்!” — விஜய் குறித்து பிரேம்ஜி வெளியிட்ட வைரல் போஸ்ட்!