---Advertisement---

மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தலைவர் கொலை- கடும் வன்முறை

Published on: March 23, 2022
---Advertisement---

மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து துணைத் தலைவர் கொலை செய்யப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.மேற்கு வங்கத்தின் பிர்பும் மாவட்டம், ராம்பூர்ஹத் அருகே பரிஷால் கிராமப் பஞ்சாயத்து உள்ளது. இதன் துணைத் தலைவராக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேக் (38) என்பவர் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர், பாது ஷேக் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.

இதில் குண்டுகள் வெடித்து படுகாயம் அடைந்த பாது ஷேக், மருத்துவமனை கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு அடுத்த சில மணி நேரத்தில் ஒரு கும்பல் அப்பகுதியில் வன்முறையில் இறங்கியது. இதில் ஒரு தீ வைப்பு சம்பவத்தில் 7-8 வீடுகள் எரிந்து சாம்பலாகின. இதில் ஒரு வீட்டில் இருந்து 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் படுகாயம் அடைந்த மூவரில் ஒருவர் நேற்று காலை இறந்ததால், உயிரிழப்பு 8 ஆக உயர்ந்தது. இந்த சம்பவத்தால் ராம்பூர்ஹத் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. அங்கு பாதுகாப்புக்கு ஏராளமான போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த 11 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ராம்பூர்ஹத் காவல் நிலைய அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து விசாரிக்க கூடுதல் டிஜிபி (சிஐடி) ஞானவந்த் சிங் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.

 

இந்நிலையில் வன்முறை தொடர்பாக அடுத்த 72 மணி நேரத்துக்குள் அறிக்கை அளிக்கும்படி மேற்கு வங்க தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்து அதிகாரி தலைமையில் உண்மை கண்டறியும் குழுவை அனுப்பவும் அவர் முடிவு செய்துள்ளார்.

 

மத்திய அரசின் முடிவை மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வரவேற்றுள்ளார். வன்முறை தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்திக்கவும் அவர் முடிவு செய்துள் ளார். மார்க்சிஸ்ட் கட்சியும் கண் டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் அரசியல் சதி உள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. பஞ்சாயத்து துணைத் தலைவர் கொலை காரணமாகவே வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை என மாநில காவல்துறை இயக்குநர் மனோஜ் மாளவியா கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!

Actor Legend Saravanan speaking at a private college event in Chennai.

விஜய் சார் படங்கள் போல என் படமும் இருக்கும்: டிரிபிள் ஆக்ஷனில் களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்!

Promotional visual representing Hip Hop Thamizha's insights on Meesaya Murukku 2.

மீசைய முறுக்கு 2 படத்தில் 3 தலைமுறை கானா இசை: சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்த ஹிப்ஹாப் தமிழா!