---Advertisement---

விண்ணப்பிக்க தயாராகுங்க…குரூப் – 2 எக்ஸாம் தேதி வந்தாச்சு!…

Published on: June 20, 2024
exam
---Advertisement---

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் – 2 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ளலாம். இன்று வெளியிடப்பட்டுள்ளது  ஆன்லைன் விண்ணப்பங்கள். இதன் மூலம் இன்றிலிருந்தே விண்ணப்பிக்கலாம்   என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான இளைஞர்களின் கனவை நிறைவேற்றி உள்ளது இந்த தேர்வுகள்.

இதனால் தங்கள் வாழ்க்கையில் புத்துணர்வு பெற்றவர்கள் ஏராளம். இந்த குரூப் – 2 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்க துவங்கலாம். இன்றிலிருந்து ஜுலை பத்தொன்பதாம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்விற்கான கட்டணம் செலுத்தவும் ஜூலை பத்தொன்பதாம் தேதி தான் கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் வரும் விண்ணப்பங்களும், செலுத்தப்படும் தேர்வு கட்டணங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது. செப்டம்பர் பதிநான்காம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சியின் இணைய தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

exam hall
exam hall

இந்த போட்டி தேர்வுகள் மூலம் தங்களது கனவுகளை நினைவாக்கிய நபர்கள் ஏராளம் என இருக்கும் நிலையில். இந்த தேர்விற்கான அறிவிப்பு எப்போது வரும் என காத்திருக்கும் இளைஞர் பட்டாளமும் இருந்து வருகிறது. ஒரு முறை கோட்டை விட்டாலும் தங்களது தொடர் முயற்சியால்  அடுத்தடுத்து இந்த தேர்வுகளை எதிர் கொண்டு, அதில் வெற்றியும் பெற்று, முன்னுதாரணமாக பலரும் இருந்து வந்திருக்கிறார்கள்.

இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, இந்த தேர்விற்கு தங்களை தயார் படுத்திக்கொள்வதற்காக சில, பல தியாகங்களை செய்தவர்களும் உண்டு.

இந்த தேர்வு குறித்த கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள,

https://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.