---Advertisement---

பிரதமர் மோடிக்கு பிஸ்டல், ஹாக்கி மட்டை… பதக்கம் வென்ற வீரர்கள் கொடுத்த பரிசு…!

By Sri
Published on: August 15, 2024
---Advertisement---

பிரதமர் மோடிக்கு பிஸ்டல், ஹாக்கி மட்டையை பதக்கம் வென்ற வீரர்கள் பரிசாக வழங்கியிருக்கிறார்கள்.  பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் ஒரு வெள்ளி, ஐந்து வெண்கலம் என ஆறு பதக்கங்களை இந்தியா வென்றது.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்கள். ஒவ்வொரு வீரரும் பிரதமர் மோடியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். துப்பாக்கி சூடுதலில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டை பிரிவு என இரண்டு வெண்கலம் வென்ற மனு பாக்கர் பிரதமர் மோடிக்கு ஒரு ஏர் பிஸ்டலை பரிசாக வழங்கினார்.

மேலும் வெள்ளி வென்ற ஹாக்கி வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்ட ஜெர்சி மற்றும் ஹாக்கி மட்டையை பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினார்கள். பின்னர் வீரர் வீராங்கனைகள் பிரதமர் மோடி உடன் கலந்துரையாடினார்கள். அப்போது ஒலிம்பிக் போட்டியில் ஏற்பட அனுபவங்களை பற்றி பகிர்ந்து கொண்டார்கள். இந்த சந்திப்பில் ஈட்டி எறிதலில் வெள்ளி பரிசு வென்ற நீரத் சோப்ரா மற்றும் பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து ஆகியோர் மற்றும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க