---Advertisement---

நீட் தேர்வு விலக்கு…முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை…

Published on: June 28, 2024
Neet
---Advertisement---

மருத்துவக்கல்லூரிகளில் சேர நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு சொல்லியதன் படி ஆண்டுதோறும் இந்த தகுதித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு எதிர்ப்புகள் கிளம்பி, தொடர்ந்து இந்த தேர்வு முறையை ரத்து செய்ய கோரி அழுத்தங்கள் கொடுக்கப்பட்டும் வருகிறது.

தமிழக ஆளும் கட்சியான ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வாங்கித்தருவோம் என தேர்தல் சமயத்தில் வாக்குறுதி கொடுத்துத்தான் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது.

Stalin
Stalin

நீட் தேர்விற்கு எதிரான தங்களது எதிர்ப்பை மத்திய அரசிற்கு தெரிவித்து வந்த வண்ணமே இருக்கிறது தமிழக அரசு. சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் இந்த நேரத்தில் இன்று நீட் தேர்விற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வு வந்த பிறகு கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு என்பது எட்டாக்கனியாகி விட்டது. மாநில மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தும் உரிமையை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கும் விதாமான இந்த நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும்.

நீட் தேர்வை கைவிடும் வகையில் மருத்து ஆணைய சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என தமிழ் நாடு அரசு ஒரு மனதாக வலியுறுத்துவாக சொன்னார்.

அதோடு தமிழ்நாட்டின் நீட் விலக்கு சட்டமுன் வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றார். நீட் தேர்வை அரசியல் ரீதியாகவும்ம் சட்ட ரீதியாகவும் தொடந்து எதிர்த்து வருகிறோம். தமிழ் நாட்டின் எதிர்ப்பு குரல் தற்போது நாடு முழுவதும் ஒலிக்கத்துவங்கியுள்ளது என பேசியிருந்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வரும் கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிஸி' திரைப்படத்தின் பிரத்யேக விளம்பரப் பதாகை.

Massive Box Office Hit: முதல் வாரத்தில் ரூ.107 கோடியைக் கடந்த கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’!

Official editorial banner highlighting the court verdict and legal case involving actor Vimal.

1 ஆண்டு சிறை தண்டனை! – நடிகர் விமலுக்கு எதிரான செக் மோசடி வழக்கில் அதிரடி தீர்ப்பு!

Official title and first look announcement poster for director R Raghav Mirdath's upcoming surreal film.

R Raghav Mirdath Next Movie! – ‘பன் பட்டர் ஜாம்’ இயக்குநரின் புதிய ஹாரர் படம்: டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் விரைவில்!

Official editorial banner highlighting actor Vishal's three distinct getups in the movie Magudam.

Magudam Movie Updates! – 3 வித்தியாசமான கெட்டப், இளையராஜா வெறித்தனம்: மகுடம் படம் பற்றி விஷால் மாஸ் பேட்டி!

Official editorial banner celebrating Vijay Antony's birthday and the simultaneous Tamil-Telugu release of Appakutty.

Appakutty Movie Update! – தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீசாகும் விஜய் ஆண்டனியின் ‘அப்பாக்குட்டி’!

Official editorial banner highlighting cricketer Varun Chakravarthy's emotional Instagram post for actor Vijay.

உங்களை மிஸ் பண்ணுவேன்! – நடிகர் விஜய்க்காக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு!