---Advertisement---

இடைத்தேர்தலை வைத்து எதையும் எடை போட முடியாது…அண்ணாமலை அதிரடி விளக்கம்…

Published on: July 13, 2024
Annamalai
---Advertisement---

 

காலியாக இருந்த விக்கிரவாண்டி தொகுதிக்கு கடந்த பத்தாம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்பட்டு அதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இன்றைய நன்பகல் நிலவரப்படி தமிழகத்தின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் அன்னியூர் சிவா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.

விக்கிரவாண்டி தொகுதி வாக்களப் பெருமக்களுக்கு முதலமைச்சர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

Vikravandi
Vikravand

இந்நிலையில் முன்னிலை விவரங்கள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு விளக்கமளித்த  பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடைத்தேர்தலில் ஆளும் கட்சிகளே வெற்றி பெற்று வரும் அதிசயம் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதன் காரணங்கள் ஆராயப்படும் என்றார்.

இந்த இடைத் தேர்தல் 2026ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டம் என அமைச்சர்கள் சொல்லியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆளும் கட்சிகள் இடைத் தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெறுவதும், அதன் பின்னர் நடக்கும் பொதுத் தேர்தலில் நேர் எதிர்மறையான முடிவுகளைப் பெறுவதும் சகஜமான ஒன்றாக இருப்பதாகவும் சொன்னார்.

இந்த தேர்தலை வைத்து பொதுத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் எண்ணம் இனி ஈடேறாது என்றார். மேலும் முழுமையான முடிவுகள் வந்த பிறகு இந்த இடைத் தேர்தல் குறித்து ஓரிரு நாட்களில் மீண்டும் சந்தித்து விளக்கம் அளிப்பதாகவும் பேசினார். பேட்டியின் இடையே தேர்தல் நடத்தப்பட்ட விதம் குறித்து பேசினார் அண்ணாமலை.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official promotional teaser graphic for Ajith Kumar's motorsports documentary Gladiators.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டீசர் வெளியீடு: மோட்டார்ஸ்போர்ட் உலகை அதிரவைக்கும் ‘Gladiators: In Pursuit of Challenges’ அதிகாரப்பூர்வ டீசர்!

Official action-packed promotional trailer poster for Sundeep Kishan's Sigma directed by Jason Sanjay.

ஜெசன் சஞ்சய் இயக்கத்தில் சுந்தீப் கிஷனின் ‘சிக்மா’ ட்ரெய்லர்: மிரட்டலான கொள்ளை மற்றும் அதிரடி ஆக்‌ஷனுடன் வெளியானது மசாலா விருந்து!

Official 'First Move' promotional poster for Dhruv Vikram's action film Jackie.

துருவ் விக்ரமின் ‘ஜாக்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் மூவ் அப்டேட்: சந்தோஷ் நாராயணன் இசையில் விறுவிறுப்பாக நடக்கும் படப்பிடிப்பு!

Official trailer promotional graphic for Keerthy Suresh and Karthick Subbaraj's Dorothy.

கார்த்திக் சுப்புராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’ ட்ரெய்லர்: கிராமத்து பின்னணியில் மிரட்ட வரும் இசைஞானி இளையராஜா காவியம்!

Official promotional poster for the Marathi film gondhal, India's official entry to the 2027 Oscars.

2027 ஆஸ்கார் களத்தில் மராத்தி படம்: இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘கொண்டால்’!

Official announcement poster for Bhavana Studios' upcoming multilingual comedy-drama Picnic.

பிரேமலு தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மெகா படம்: குடும்பத்துடன் கொண்டாட வரும் ‘பிகினிக்’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!