---Advertisement---

ஃபார்முலா 4 கார்பந்தயம்… இன்று முதல் மூன்று நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்… வெளியான அறிவிப்பு..!

By Sri
Published on: August 30, 2024
---Advertisement---

சென்னையில் ஃபார்முலா போர் கார்பந்தயம் நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாட்டில் இந்தியாவின் முதல் இரவு நேர கார்பந்தயம் சென்னையில் நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த இரண்டு தினங்களும் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை கார்பந்தயம் நடைபெற இருக்கின்றது.

சென்னை தீவுத்திடல், போர் நினைவு சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்த சாலை அண்ணா சாலை வரை 3.5 கி.மீ சுற்றளவில் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த சாலைகளில் இன்று போட்டிக்கான ஒத்திகை நடைபெறுகின்றது. எனவே இந்த சாலைகளில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருந்ததாவது:

* “காமராஜர் சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை, சென்டிரல் ரெயில் நிலையம், ஈ.வெ.ரா.சாலை வழியாக சென்றடையலாம்.

* அண்ணா சாலையில் வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்டிரல் ரெயில் நிலையம் நோக்கி திருப்பி விடப்படும்.  சிவானந்த சாலை மற்றும் கொடி மரச்சாலை முற்றிலும் மூடப்படும்.

* காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்தவித போக்குவரத்து மாற்றமும் இல்லை.  சென்டிரலில் இருந்து அண்ணாசிலை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்லலாம். பல்லவன் சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை ஒரு வழிப்பாதையானது தற்காலிக இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

* முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணாசாலை மற்றும் கொடி மரச்சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அதற்குப் பதிலாக பல்லவன் சாலை, ஈ.வெ.ரா.சாலை, சென்டிரல் ரெயில் நிலையம், பெரியமேடு காந்தி இர்வின் சாலை வழியாக சென்று தங்கள் சேர வேண்டிய இலக்கை அடையலாம்

* கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகள், வாலாஜா சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈ.வெ.ரா.சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், முத்துசாமி பாயிண்ட், பாரிமுனை ஆகிய சாலைகளில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செல்வதற்கு தற்காலிக தடை அமலில் இருக்கும்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor and director Vishal locked to release the official action-packed teaser of his 35th movie Magudam under Super Good Films on June 10.

விஷாலின் முரட்டுத்தனமான ஆக்ஷன் சம்பவம்… “மகுடம்” டீசர் ரிலீஸ் தேதி இதோ… தியேட்டர்களை அதிரவிட வரும் SGF99!

Actress Sukanya wins legal battle as Madras High Court orders Sun TV Network to pay 10 lakh damages over 1096 Veerappan interview defamation.

30 ஆண்டுகால அவதூறுக்கு அதிரடி தீர்ப்பு! சன் டிவிக்கு 10 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்… நடிகை சுகன்யாவுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி!

Official fantasy-romance trailer of Khushbu Sundar's Avni Movies production Double Occupancy starring Santhosh and Samyuktha.

“காலைல 6 டூ மாலை 6 அவ ஒரு ரஜினி…” பகலில் பெண் இரவில் ஆண்! அவ்னி மூவிஸின் “டபுள் ஆக்குபென்சி” முரட்டு ட்ரெய்லர் இதோ!

Actor Dhanush and director Rajkumar Periasamy officially welcoming music composer Sai Abhyankkar on board for their upcoming project D55.

‘கச்சி சேரா’ அலை தனுஷ் படத்திலும் வீசப்போகிறது… “D55” இசையமைப்பாளர் இவர்தான்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த வண்டர்பார் ஃபிலிம்ஸ்!

Director Pa Ranjith and actor Arya locked to begin the prequel shooting of their blockbuster boxing movie franchise Sarpatta 2 from July 2026.

கபிலன் – வேம்புலி மோதலுக்கு பின்னால் இருக்கும் அசல் வரலாறு… ‘சார்பட்டா 2’ கதையில் பா.ரஞ்சித் வைத்த முரட்டு சர்ப்ரைஸ்… ஷூட்டிங் தேதி இதோ!

Director Nelson Dilipkumar updating the script layout for Superstar Rajinikanth's upcoming mega-sequel Jailer 2.

‘ஜெயிலர் 2’ படத்தில் இருந்து தூக்கப்பட்ட பாலிவுட் சூப்பர்ஸ்டார்கள்… கதையை அதிரடியாக மாற்றிய நெல்சன்… இந்த வாரமே தொடங்கும் முரட்டு ஷூட்டிங்!