இந்தியாவிலேயே அதிக பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதிக தொழிற்சாலைகள் மற்றும் அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கின்றது என புள்ளியல் அமைச்சகத்தின் அறிக்கை வெளியாகி இருக்கின்றது. இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தொழிற்சாலைகளில் தமிழகத்தில் 15.66% தொழிற்சாலைகள் இருக்கின்றது.
தமிழகத்திற்கு அடுத்தபடியாக குஜராத் 12.25 சதவீதமும், மகாராஷ்டிரா 10.44 சதவீதமும், உத்திரபிரதேசம் 7.54 சதவீதமும், ஆந்திர பிரதேசம் 6.51 சதவீதமும் கொண்ட மாநிலங்களாக இருக்கின்றன. நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஒட்டுமொத்த தொழிலாளர்களில் தமிழகத்தில் மட்டும் 15 சதவீதம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
தமிழகத்திற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றிருக்கின்றது. இந்த புள்ளி விவரத்தை மத்திய அமைச்சகம் வெளியிட்டு இருக்கின்றது குறிப்பிட்டிருக்கின்றது