---Advertisement---

தோனியிடம் இருந்து கோலிக்கு எவ்வாறு கேப்டன்சி மாற்றப்பட்டது – விளக்கமளித்த முன்னாள் நிர்வாகி !

By Sri
Published on: March 7, 2020
---Advertisement---

இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள எம் எஸ் கே பிரசாத் இந்திய அணி குறித்து தனது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த எம் எஸ் கே பிரசாத்தின் பதவிக்காலம் சில வாரங்களுக்கு முன்னதாக முடிவுற்றது. அவரது பதவியில் இப்போது சுனில் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது பதவிக்காலத்தில் தோனியிடம் இருந்து கேப்டன்சி கோலிக்கு கைமாற்றப்பட்டது  குறித்து பேசியுள்ளார்.

அவரது பேட்டிடில் ‘தோனியிடமிருந்து கேப்டன் பொறுப்பு எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல் கோலிக்கு கை மாற்றப்பட்டது. அந்த பெருமை தேர்வுக் குழுவையே சேரும். தோனி கேப்டன்சியில் இருந்து விலகுவது என்று முடிவு எடுத்தவுடன், அதற்கு சரியான நபர் யார் என்று பார்த்தோம். கேப்டன் மாற்றப்பட்டால் அதனால் பிரச்சனைகள் எழக்கூடாது என்றும் நினைத்தோம்.

அதற்கு சரியான நபர் கோலிதான் என முடிவு செய்து, அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தோம். அவரும் சிறப்பாக தலைமையேற்று அனைத்து விதமானப் போட்டிகளிலும் நம்பர் 1 அணியாக இந்தியாவை உயர்த்தினார்’ எனக் கூறியுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.