---Advertisement---

பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் மு க ஸ்டாலின்… பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை…!

By Sri
Published on: September 27, 2024
---Advertisement---

இன்று காலை 11 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்தார்.

பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று இரவு 8.30 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. இதையடுத்து முதல்வர் மு க ஸ்டாலின் டெல்லி சாணக்கியபுரத்தில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று தங்கினார்.

இன்று காலையில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசிய முதல்வர் மு க ஸ்டாலின் அதனை தொடர்ந்து 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமர் மோடியும் முக ஸ்டாலினை இன்முகத்துடன் வரவேற்றார் . பின்னர் பிரதமருக்கு சால்வை அணிவித்து முதல்வர் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு பிரதமருடன் அமர்ந்து பேசினார்.

தமிழ்நாட்டில் ரூ.63,426 கோடி செலவில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்திட்ட பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார் முதல்வர் மு க ஸ்டாலின். இதற்காக தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி இன்னும் கிடைக்காததையும் கூறினார். இதையடுத்து மாநில அரசின் நிதியில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டி மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுவதையும் மத்திய அரசின் நிதியை விடுவிக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் மு க ஸ்டாலின் கூறினார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  இந்தியர்களுடன் ஆற்றில் தலை குப்புற கவிழ்ந்த பஸ்... 14 பேர் பலி... அதிர்ச்சி சம்பவம்...!

அதுமட்டுமில்லாமல் கல்விக் கொள்கைக்கான நிதியும் விடுவிக்கப்படாமல் இருப்பதை முதல்வர் மு க ஸ்டாலின் சுட்டிக்காட்டினார், தமிழகத்திற்கு இந்த நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் மேலும் நீட் தேர்வுக்கு விலக்கு உள்ளிட்ட பல்வேறு பொது பிரச்சனைகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் முதல்வர் மு க ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்த சந்திப்பின் போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் பிரதமர் அலுவலக செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் அவருடன் இருந்தனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring V.D. Satheesan's review of Bethlehem Kudumba Unit.

“மனசுக்கு அவ்ளோ ரிப்ரெஷிங்!” ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ படத்தைப் பார்த்துவிட்டு டைரக்டருக்கே போன் போட்ட முதல்வர்!

Editorial visual featuring the news update on Rajinikanth's Padayappa 2.

‘படையப்பா’ ரீ-ரிலீஸ் வெற்றிக்குப் பின் ரஜினி கொடுத்த ஐடியா: நீலாம்பரி ரீ-என்ட்ரி கதையைக் கூறிய கே.எஸ்.ரவிகுமார்! அப்போ ‘படையப்பா 2’ ரெடியா?

Editorial visual featuring Natty Natraj's appreciation for the movie Drones.

சதுரங்க வேட்டை பாணியில் ‘டிரோன்ஸ்’ படத்தின் வெற்றி: இளம் டீமைப் பாராட்டி நெகிழ்ந்த நடிகர் நட்டி!

Editorial visual featuring the AI promo update for Rajan Vagaiyarah.

வெற்றிமாறனின் ‘ராஜன் வகையறா’ புதிய AI போஸ்டர் வெளியீடு: கென் கருணாஸ் வடிவமைப்பில் மிரட்டல் லுக்!

Editorial visual featuring the pooja launch of Trident Arts Production No. 22.

சசிகுமார், நரேன் நடிப்பில் பிரம்மாண்ட புதிய படம்: டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு எண் 22 பூஜை விழா தொடக்கம்!

Editorial visual featuring the premiere and advance booking updates for 418.

‘418’ படத்திற்கு ஸ்பெஷல் ப்ரீமியர் காட்சிகள் அறிவிப்பு: அக்டோபர் 22 இரவு முதல் திரையரங்குகளில் ரிலீஸ்!