கரூர் மாவட்ட ஆய்வுப்பணிகளுக்காக அமைச்சர் மா சுப்பிரமணியன் கரூரில் தங்கியுள்ளார். இன்று மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிகிறார்.

நோயாளிகளுக்கு மருந்துப் பெட்டி வழங்குதல், இயன்முறை சிகிச்சை வலி மற்றும் ஆதரவு தேவைப்படுபவர்களைப் பார்வையிடுதல், கரூரில் உள்ள தனியார் அரங்கத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கரூர் நகராட்சி பல்நோக்கு அரங்கத்தில் சிஎஸ்ஆர் நிதி மூலம் தனியார் மருத்துவமனை வாயிலாக தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தல், தடுப்பூசிக்காக சிஎஸ்ஆர் நிதி வழங்குதல், கரூர் பழைய அரசு மருத்துவமனையைப் பார்வையிடுதல், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்தல், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கத்தில் உள்ள அரங்குகளைப் பார்வையிடுதல், போன்ற நிகழ்ச்சிகளை இன்று மேற்கொள்கிறார்.

இதனிடையே இன்று காலை கரூர் வெண்ணெய்மலை அருகே உள்ள மைதானத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் அமைச்சர் சுப்பிரமணியனும் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். இங்குள்ள மைதானத்தில் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு சூப் வழங்கப்படுவது வழக்கம். அமைச்சர்கள் இருவருக்கும் சூப் வழங்கப்பட்டது அதை அமைச்சர்கள் அருந்தினர்.







