---Advertisement---

எனக்கு களிமண்ணா அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அண்ணாமலை பதிலடி

Published on: October 22, 2021
---Advertisement---

தமிழக  மின்சாரத்துறை அமைச்சராக இருப்பவர் கரூரை சேர்ந்த செந்தில் பாலாஜி. இவரும் பாரதிய ஜனதா தலைவருமான அண்ணாமலையும் கரூரை சேர்ந்தவர்தான். சமீபத்தில் செந்தில்பாலாஜி மீது மின்சாரத்துறையில் ஊழல் செய்ததாக அண்ணாமலை ஆதாரங்களுடன் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த செந்தில்பாலாஜி அண்ணாமலை தலையில் களிமண் தான் உள்ளது என கூறி இருந்தார்.

இதற்கு பதிலளித்த அண்ணாமலை மணல் திருடும் அமைச்சர் அவர்கள் என் மண்டையில் களிமண் என்கிறார். இருக்கட்டும், எனக்கு பெருமை தான், களிமண்ணை வைத்து பிள்ளையார் சிலை செய்து புண்ணியம் தேடலாம் திருட்டு மண்ணை வைத்து பாவம் மட்டுமே சம்பாதிக்க முடியும்!!! நினைவிருக்கிறதா 11 மணி 05 நிமிடம் வாக்குறுதி என கேட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.