---Advertisement---

தமிழகத்தில் வரும் 29 ஆம் தேதி வரை… மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

By Sri
Published on: September 23, 2024
---Advertisement---

தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது “மத்திய வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும்.

இதனால் இன்று மற்றும் நாளை வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது. மேலும் தரைக்காற்று ஓரிரு இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். வரும் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

சென்னை மற்றும் அதன் புறநகரங்களை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது” என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official teaser promotional banner for the Hindi film Nayyi Navelli.

பாலிவுட்டில் ஜி.வி. பிரகாஷின் மியூசிக்கல் என்ட்ரி: ‘நயி நவேலி’ படத்தின் மிரட்டலான டீசர் இதோ!

Official first single promotional banner for Vijay Sethupathi's Baththa.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தின் முதல் பாடல்: வெளியானது மனதை உருக்கும் ‘மகளே’ சிங்கிள்!

Actress Divya Spandana (Ramya) in a file photo.

“திருமணம்தான் வாழ்க்கை இல்லை…” திருமணம் குறித்து நடிகை திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) ஓப்பனாகப் பேச்சு!

Official promotional poster for Suriya's Inbaraj confirming a Diwali 2026 release.

சூர்யாவின் ஹாட்ரிக் சாதனை: தீபாவளிக்கு வெளியாகும் ‘இன்பராஜ்’ – ஜித்தூ மாதவன் இயக்கத்தில் மிரட்டல்!

Screengrab of the viral Instagram story shared by Aarti Ravi.

“சூர்யா, அஜித், விக்ரம், கமலை விட…” ஆர்த்தி ரவியின் வைரல் இன்ஸ்டா ஸ்டோரி மற்றும் பின்னணி என்ன?

Special character reveal poster of Ravi Mohan as Lord Venkateswara in Vaddi Kaasula Vaada.

‘வட்டி காசல வாட’ படத்தில் கடவுள் வேடத்தில் ரவி மோகன்: ஸ்ரீ வெங்கடேஸ்வராவாக களமிறங்கும் நடிகர்!