---Advertisement---

லீவு கொடுக்காத மேனேஜர்… அலுவலகத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த பெண் ஊழியர்… தொடரும் அவலம்…!

By Sri
Published on: September 27, 2024
---Advertisement---

மேனேஜர் லீவ் கொடுக்காத நிலையில் பெண் ஊழியர் ஒருவர் அலுவலகத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

உலகம் முழுவதும் தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் வலுப்பெற்று வருகின்றது. ஊழியர்கள் நவீன அடிமைத்தனத்தில் சிக்கி வருகிறார்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதை உறுதிப்படுத்தும் வகையில் பணிச்சுமை காரணமாக ஏற்படும் மரணங்கள் தொடர்கதை ஆகிய வருகின்றது.

Task, Incentive Target, Apprisal போன்றவை ஊழியர்களை பிணைக்கும் சங்கிலிகளாக இறுகி வருகின்றது. கடந்த வாரம் புனேவின் எர்னெஸ்ட் யங் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 26 வயதான பெண் பனிசுமையால் தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து உத்திர பிரதேச மாநிலத்தில் தனியார் வங்கியில் பணியாற்றிய வந்த பெண் ஊழியர் வேலையில் இருக்கும் போதே மன அழுத்தத்தில் சேரிலிருந்து சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

இதை தொடர்ந்து தற்போது மற்றொரு சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. தாய்லாந்தை சேர்ந்த 30 வயதான பெண் சிக்லீவ் வேண்டி மேனேஜரிடம் கேட்டிருக்கின்றார். ஆனால் மேனேஜர் லீவு கொடுக்காத நிலையில் மேனேஜர் முன்னையே நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

தாய்லாந்தில் சமுத் பிராகன் மாகாணத்தில் இயங்கி வரும் எலக்ட்ரானிக் பொருட்கள் தொடர்புடைய பிளான்டில் வேலை செய்து வந்த மே என்கின்ற 30 வயது பெண் ஊழியர் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு இருக்கின்றார். கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி முதல் அவருக்கு உடல்நிலை மோசமான நிலையில் மெடிக்கல் சர்டிபிகேட்டை காட்டி தனக்கு லீவ் கொடுக்கும்படி கேட்டு இருக்கின்றார் .

அதைத்தொடர்ந்து செப்டம்பர் ஐந்து முதல் எட்டாம் தேதி வரை லீவு எடுத்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். டிஸ்டார்ஜ் ஆன பிறகு செப்டம்பர் 12ம் தேதி வரை ஓய்வுக்காக மேலும் இரண்டு நாட்கள் லீவு வேண்டும் என்று கேட்டு இருக்கின்றார். அதிக நாட்கள் லீவு எடுத்து விட்டதால் இனி லீவு கொடுக்க முடியாது என்று மேனேஜர் கூறி விட்டார்.

இதனால் வேலையை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி மேனேஜரிடம் வந்து மெடிக்கல் சர்டிபிகேட்டை காட்டி விட்டு மீண்டும் வேலை செய்ய தொடங்கியிருக்கின்றார். வேலை ஆரம்பித்து 20 நிமிடத்திற்குள் சுயநினவை இழந்த அந்த பெண் மயங்கி கீழே விழுந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அடுத்த நாளே அந்த ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official title announcement poster for Ajith Kumar's new film Daredevil.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது: அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்திற்கு இசையமைக்கும் அனிருத்! தயாரிப்பு ஷாலினி அஜித்!

Actor Sivakarthikeyan featured in the trending ATM commercial.

நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய விளம்பர ரகசியம்: ஏடிஎம் (ATM) என்றால் என்ன தெரியுமா?

Concept image highlighting reports surrounding actor Dhanush and director Shankar.

ஷங்கரின் படத்தில் நடிக்க மறுத்த தனுஷ்? கோலிவுட்டில் தீயாய் பரவும் தகவல்!

Director SS Rajamouli sharing updates about his upcoming epic adventure film Varanasi.

வாரணாசி படத்தின் 80 சதவீத ஷூட்டிங் நிறைவு: பிரம்மாண்ட அப்டேட் வெளியிட்ட எஸ்.எஸ். ராஜமௌலி!

Director Mohan Raja and actor Karthi collaborating for an upcoming massive commercial entertainer.

நடிகர் கார்த்தியுடன் கைகோர்க்கும் ‘தனி ஒருவன்’ இயக்குனர்: கோலிவுட்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Actors Suriya and Jyotika featured on the cover of The Hollywood Reporter India August 2026 issue.

ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா அட்டைப்படத்தில் சூர்யா – ஜோதிகா: கோலிவுட் காதல் ஜோடியின் கியூட் பேட்டி!