---Advertisement---

கள்ளக்காதலனுக்காக மகளைப் பலியாக்கிய தாய் – 30 வயது வித்தியாசத்தில் திருமணம் !

By Sri
Published on: March 21, 2020
---Advertisement---

சென்னையில் கட்டிட பணியாள் பெண் ஒருவர் தன் மகளை தனது கள்ளக்காதலனுக்கே திருமணம் செய்து வைத்துள்ளார்.

சென்னை செங்கல்பட்டைச் சேர்ந்த கட்டிடத்தொழிலாளி யுவராணி. 40 வயதாகும் இவருக்கும்  சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி கண்ணனுக்கும் வேலை விஷயமாகப் பழகும் போது கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது சம்மந்தமாக கண்ணனின் மனைவி போலீஸில் புகார் அளித்து பேச்சுவார்த்தை நடத்தி தன் கணவரை தன்னோடு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனாலும் சில நாட்களிலேயே தங்கள் காதல் லீலைகளை மீண்டும் நடத்தியுள்ளார் கண்ணன். இந்த பிரச்சனை மீண்டும் கண்ணனின் மனைவிக்குத் தெரியவர, பிரச்சனைக் கிளம்பியுள்ளது. இதனால் கண்ணன் எங்கு தன்னைப் பிரிந்து விடுவாரோ என்ற அச்சத்தில் தனது 19 வயது மகளை 48 வயது கண்ணனுக்கு திருமணம் செய்துவைத்துள்ளார்.

இந்த விஷயம் அறிந்து கண்ணனின் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் கண்ணனை மனைவியோடு அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் மனைவியோடு வாழாத கண்ணன், யுவரணியிடம் சென்றுள்ளார். அங்கிருந்து தன் மனைவிக்கு போன் செய்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து ஆபாசமாக திட்டியுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கண்ணனின் மனைவி அதிக மாத்திரைகளை தின்று தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அவரைக் காப்பாற்றிய உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதன் பின்னர் கண்ணனின் மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.