திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஆளிப்படியில் ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூஜைகள் முடித்து கோவிலை பூட்டி விட்டு சென்ற பூசாரி திரும்ப வந்து அடுத்த நாள் கோவிலை திறந்த உடன் ஒரு துப்பாக்கியும் அதற்குரிய உறையும் இருந்தது.
அதிர்ச்சியைடைந்த அவர் காவல்துறையிடம் தெரிவித்தார்.போலீசார் அந்த துப்பாக்கியையும் உறையையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட அந்த துப்பாக்கியை வெளிமாநிலத்தில் இருந்து வாங்கி வந்துள்ளனர்.
ஆனால் இந்த கோவிலில் ஏன் விட்டுசென்றனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.













