---Advertisement---

உயிரை பணயம் வைத்து திருடனை பிடித்த போலீஸ்- திருவள்ளூர் எஸ்.பி நேரில் அழைத்து பாராட்டு

Published on: September 29, 2021
---Advertisement---

திருவள்ளூரில் உள்ள அய்யனார் அவென்யூவை சேர்ந்தவர் இமானுவேல் ராஜசேகர். இவர் வீடு தேடி வரும் மருத்துவ திட்டத்தின், டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு இமானுவேல் ராஜசேகர், தனது செல்போனில் பேசிக் கொண்டே ஜேஎன் சாலையில் நடந்து சென்றார்.

அப்போது, அவரின் பின்னால் பைக்கில் 3 பேர், அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்து கொண்டு அதிரடியாக பறந்தனர். அந்த நேரத்தில், அவ்வழியாக சென்ற ஆயுதப்படை காவலர் முருகேசன், தனது பைக்கில் அவர்களை விரட்டி சென்று, திருவள்ளூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில் மடக்கி பிடித்தார்.

இருந்தாலும் மர்மநபர்கள் விடுவதாயில்லை காவலர் முருகேசனை சரமாரியாக தாக்கினர். ஆனாலும் அவர், 2 பேரை மடக்கி பிடித்தார். ஒருவர் தப்பிவிட்டார். தகவலறிந்து  திருவள்ளூர் நகர இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், அங்கு சென்று 2 பேரையும், பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றார். விசாரணையில், ராஜாஜிபுரம் கஜா (எ) கஜேந்திரன் (22), ஆவடி அருகே கோயில் பதாகை, கலைஞர் கருணாநிதி நகர், 3வது தெருவை சேர்ந்த மதன்குமார் (22), தப்பியவர் கோயில் பதாகை விஜய் என தெரிந்தது.

இதில் கஜேந்திரன் மீது, கொலை, கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகளும், மதன்குமார் மீது வழிப்பறி வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான விஜயை வலைவீசி  தேடி வருகிறார். இந்த சம்பவத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் கொள்ளையர்களை விரட்டி சென்று, அவர்களது தாக்குதலை சமாளித்து 2 பேரை மடக்கி பிடித்து செல்போனை கைப்பற்றிய ஆயுதப்படை காவலர் முருகேசனை, எஸ்பி வருண்குமார் தனது அலுவலகத்துக்கு அழைத்து ரூ.1000 வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!