கேரளாவில் திரைத்துறையை சேர்ந்த நடிகை ஒருவர் காவல்துறை பணிக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.
கேரளாவில் பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகை ஒருவர் போலீஸ் பணியில் சேர உள்ளார். திருவனந்தபுரத்தை சேர்ந்த ரத்னாகரன் என்பவர் போலீஸ அதிகாரியாக வேலை பார்த்து வருகின்றார். இவருடைய மகள் அப்சரா, மலையாள தொலைக்காட்சி தொடர் நடிகை. இவர் மலையாள பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
பல தொலைக்காட்சி தொடர்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசதி இருக்கின்றார். இவரது தந்தை ரத்னாகரன் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்த போது விபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து வாரிசு அடிப்படையிலே அப்சராவுக்கு காவல்துறையில் வேலை கிடைத்துள்ளது . இது குறித்து அவர் தெரிவித்தாவது “கலை துறையில் பயணிப்பதால் எனக்கு போலீஸ் துறையில் சேர்வதற்கு விருப்பமில்லை.
ஆனால் அரசு பணி என்பது நிரந்தர வேலை என்பதால் எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் இதில் சேர வற்புறுத்தி வருகிறார்கள். வேலையில் சேர்வதற்கான அரசாணையும் கிடைத்துவிட்டது. விரைவில் போலீஸ் துறையில் சேர இருக்கின்றேன். பள்ளியில் படிக்கும் போது என்சிசி யில் சேர்ந்து இருந்தேன். அப்போது ராணுவத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் திரைத்துறையில் கால் வைத்த பின்பு அந்த விருப்பங்களில் இருந்து ஈடுபாடு குறைந்து விட்டது. தற்போது நான் சேர இருக்கும் காவல் பணியில் சாதித்து காட்டுவேன்” என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.







