பாகிஸ்தானை சேர்ந்தவர் மலாலா. இவர் பெண்குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும், பெண்களின் கல்விக்காகவும் தொடர்ந்து பாடுபட்டவர் இவர்.
இந்நிலையில் இவர் கடந்த 2012ம் ஆண்டு தீவிரவாதிகளால் சுடப்பட்டார்.சுடப்பட்ட உடன் லண்டனில் சிகிச்சை பெற்றார். இவரின் பெண்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டால் உலகம் முழுவதும் அனைவராலும் கவரப்பட்டார். லண்டன் அரசும் இவருக்கு குடியுரிமை கொடுத்தது.
இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்தது. உலகிலேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமைக்கு மலாலா சொந்தக்காரர் ஆனார்.
இந்நிலையில் இஸ்லாமிய முறைப்படி மலாலா நேற்று திருமணம் செய்துகொண்டார்.







