---Advertisement---

இன்று மஹா சிவராத்திரி – கண்டிப்பா கோவிலுக்கு போங்க

Published on: March 11, 2021
---Advertisement---

இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு உயிரையும் படைத்து காத்து இரட்சித்து வருபவன் எல்லாம் வல்ல ஈசன். ஹிந்துக்கள் பண்டிகைகளில் எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் மஹா சிவராத்திரி மிக முக்கியமான பண்டிகை ஆகும்.

சிவராத்திரி அன்று எல்லா சிவன் கோவில்களிலும் நான்கு கால பூஜைகள் இரவிலும் நடக்கும் அனைத்து கோவில்களும் விடிய விடிய திறந்திருக்கும்

எல்லா இடத்திலும் திருவிழாக்கோலமாக இருப்பதாலும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் உள்ள ஒரு நாளாக இது பார்க்கப்படுகிறது.

இந்த நாளில் இந்தியாவில் உள்ள காசி, ராமேஸ்வரம், ஸ்ரீசைலம், திருவண்ணாமலை என அனைத்து சிவாலயங்களும் விடிய விடிய திறந்து நான்கு கால பூஜைகள் நடக்கும். குலதெய்வ வழிபாடு செய்யாதவர்களும் தங்கள் குல தெய்வத்துக்கு இன்றுதான் பூஜை புனஸ்காரங்கள் செய்வார்கள்.

இந்த நாளில் அனைவரும் சிவன்கோவிலுக்கும் , குலதெய்வகோவிலுக்கும் சென்று வழிபடுவது நல்ல பலனைத்தரும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.