மதுரையின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றுதான் சித்திரை திருவிழா. இந்த திருவிழா மதுரையின் முக்கிய அடையாளத்தின் ஒன்று. காலம் காலமாக சித்திரை திருவிழா நடந்து வருவதும் சித்திரை திருவிழா நெருங்கி விட்டாலே மதுரை மக்களுக்கு உற்சாகம் தொற்றிக்க்கொள்ளும்.
இந்த சித்திரை திருவிழா இன்று தொடங்குகிறது.
சித்திரை திருவிழாவின் முக்கிய விழா என்றால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்குதல் வைபவமும் தான் முக்கிய நிகழ்வு ஆகும்.
இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகளால் அழகர் ஆற்றில் இறங்கவில்லை மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கிறது.
அனைத்தும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடக்கிறது. பக்தர்கள் உரிய பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.













