---Advertisement---

ஆல் சைலன்ஸ் அண்ணாச்சி ஆன் தி வே…கெட்-அப்பை சேஞ்ச் பண்ண வச்ச கருடன் இயக்குனர்!…

Published on: June 24, 2024
saravanan
---Advertisement---

ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் சரவணன். தமிழ் நாட்டின் முக்கிய தொழிலதிபரான அண்ணாச்சி சரவணன் திடீரென சினிமாவில் நடிக்க துவங்கினார்.

“லெஜென்ட்” படத்தின் மூலம் தன்னை அறிமுகப்படுத்தி திரும்பி பார்க்க வைத்தார். படம் பெற்ற கலெக்சனை விட ப்ரமோவிற்காக செய்த செலவே அதிகம் என்றெல்லாம் விமர்சனம் வந்தது படம் வெளியான நேரத்தில்.

சிவகார்த்திகேயனை வைத்து “எதிர் நீச்சல்” படத்தை இயக்கியவர் துரை செந்தில்குமார். சிவாவின் சினமா கேரியரில் மிகப்பெரிய டிவிஸ்ட் கொடுத்த படமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், துரை செந்தில்குமாரின் மாஸையும் அதிகரித்தது.

அதன் பின்னர் அவர் இயக்கிய “கொடி”, “பட்டாஸ்” படங்கள் பெரிய அளவில் போனியாகவில்லை.

legend saravanan
legend saravanan

“விடுதலை” படத்திற்கு பின்னர் சூரி கதாநாயகனாக நடித்து வசூல் வேட்டையாடி வரும் “கருடன்” படத்தை இயக்கியிருந்தார் துரை. “லெஜென்ட்”படத்திற்கு பிறகு மிகப்பெரிய ப்ரேக் கொடுக்க காத்திருக்கும் சரவணனும், துரை செந்தில் குமாரும் இணையும் புதிய   படத்தின் அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

விரைவில் பெயர் வைக்கப்பட உள்ள இந்த படத்திற்காக சரவணன் தனது கெட்-டப்பை டோட்டலாக மாற்றியிருக்கிறார்.

Legend
Legend

முரட்டு தாடி, கையில் துப்பாக்கியுடன் இவர் இருக்கும் போஸ்டர் தான் இப்போ வைரல்.  சரவணனின் இந்த ஸ்டில்லை பார்த்ததுமே சொல்லி விடலாம் படம் வேற லெவல் ஆக்ஸன் மூவியாகத்தான் இருக்கப்போகிறது என.

ரெக்கார்ட் ப்ரேக்கிங் ஹிட் கொடுத்த “கருடன்” படத்திற்கு பிறகு துரை செந்தில் குமார் இயக்க உள்ள படம் என்பதாலும், சிறிய இடைவேளைக்கு பிறகு சரவணன் நடிக்க இருப்பதாலும் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு இப்போதே எகிறத்துவங்கியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official 'First Move' promotional poster for Dhruv Vikram's action film Jackie.

துருவ் விக்ரமின் ‘ஜாக்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் மூவ் அப்டேட்: சந்தோஷ் நாராயணன் இசையில் விறுவிறுப்பாக நடக்கும் படப்பிடிப்பு!

Official trailer promotional graphic for Keerthy Suresh and Karthick Subbaraj's Dorothy.

கார்த்திக் சுப்புராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’ ட்ரெய்லர்: கிராமத்து பின்னணியில் மிரட்ட வரும் இசைஞானி இளையராஜா காவியம்!

Official promotional poster for the Marathi film gondhal, India's official entry to the 2027 Oscars.

2027 ஆஸ்கார் களத்தில் மராத்தி படம்: இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘கொண்டால்’!

Official announcement poster for Bhavana Studios' upcoming multilingual comedy-drama Picnic.

பிரேமலு தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மெகா படம்: குடும்பத்துடன் கொண்டாட வரும் ‘பிகினிக்’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Recording studio setup during the official dubbing commencement of VJ Siddhu's Dayangaram.

விஜே சித்துவின் ‘டயங்கரம்’ பட அப்டேட்: பிரம்மாண்டமான முறையில் தொடங்கும் டப்பிங் பணிகள் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official character look poster of Suraj Venjaramoodu as 'Dileep' in Jailer 2.

ஜெயிலர் 2 மிரட்டலான கேரக்டர் ரிவீல்: ‘திலீப்’ கதாபாத்திரமாக களமிறங்கும் தேசிய விருது நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு!