---Advertisement---

எல்லாமே எம்.ஜி.ஆர்.தான் எங்களுக்கு!…ஆனால் அவருக்கு மட்டும் தான் மரியாதை…

Published on: April 25, 2024
mgr
---Advertisement---

புரட்சி தலைவர் என அன்பாக அழிக்கப்பட்டு சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் கதாநாயகனாக வாழ்ந்து காட்டியவர் எம்.ஜி.ஆர்.

ஒரு நடிகருக்கு ‘டூப்’பாக நடிக்க அவர்களைப் போலவே தோற்றம் கொண்ட வேறு ஒருவரை வைத்து  காட்சிகள் எடுக்கப்படுவது தமிழ் சினிமாவில் நடந்து வரக்கூடிய ஒன்றுதான்.

எம்.ஜி.ஆரின் டூப்பாக இருந்தவர் மகாலிங்கம் மேக்கப் செய்து விட்டால் எம்.ஜி.ஆர் யார், மகாலிங்கம் யார் என வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு உருவ ஒற்றுமை அப்படியே பொருந்துமாம்.

ஒருமுறை மகாலிங்கம் எம்.ஜி.ஆரை போல அந்த காட்சிக்கு தேவையான மேக்கப் போட்டுவிட்டு இருவரும் அருகருகே அமர்ந்திருக்கின்றனர்.

போன் வர, அதை அட்டன்ட் செய்ய எம்.ஜி.ஆர் சென்று இருக்கிறார் ஆபிஸிற்கு உள்ளே. அங்கிருந்த தொழிலாளர்கள் அனைவரும் வந்தது எம்.ஜி.ஆர் என அறியாமல் மகாலிங்கம் தான் என நினைத்து  அவர்கள் இஷ்டம் போல சுதந்திரமாக புகைப்பிடித்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.

இதை கண்ட எம்.ஜி.ஆர். கோபத்தில் பதில் ஏதும் சொல்லாமல் அப்படியே அவர்களை பார்த்து முறைத்திருக்கிறார்.

mgr
mgr

தான் இருக்கும் இடத்தை சுற்றி புகை, மது வாடை அறவே இருக்க கூடாது என்பதில் மிகவும் கராராக இருப்பாராம். தனி மனித ஒழுக்கம், ஆரோக்கியம் இவற்றின் மீது தனி கவனம் செலுத்தி வந்திருக்கிறார். தொழிலாளர்களின் செயல் அவருக்கு எரிச்சலையை வரவழைத்துள்ளது.

அந்த நேரத்தில் மகாலிங்கமும்  உள்ளே வர, ஆகா நாம் மகாலிங்கம் என நினைத்து நம் இஷ்டப்படி இருந்து விட்டோமே என  அனைவரும் தவறை உணர்ந்து தலை குனிந்து நின்றார்களாம்.

தன்னைச் சுற்றி உள்ளவர்களில் நலனில் மிகவும் அக்கறை காட்டக் கூடியவர் எம்ஜிஆர். என்பது இதன் மூலம் தெரியப்படுத்தப்பட்டதாம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement poster for the second single 'OneSunOneMoon' from Jailer 2.

ஜெயிலர் 2 படத்தின் 2வது சிங்கிள் ‘ஒன் சன் ஒன் மூன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அனிருத் இசையில் செப்டம்பர் 25-ல் வெளியீடு!

'ஓம்' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை வடிவம்.

ரஜினி மற்றும் சூர்யா படங்களுக்காக ‘ஓம்’ ரிலீஸை ஒத்திவைத்தார் தனுஷ்: அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!

Official theatrical release poster for Vishnu Vishal and Mamitha Baiju's movie Irandu Vaanam.

விஷ்ணு விஷால் – மமிதா பைஜு ஜோடியின் ‘இரண்டு வானம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! அக்டோபர் 23-ல் உலகமெங்கும் வெளியீடு!

News visual highlighting the casting fraud complaint and police investigation regarding the movie Dharman.

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு என்ற பெயரில் மோசடி: கமல் தரப்பு காவல் ஆணையரகத்தில் புகார்!

Visual representation of David Warner's viral AI dance video for the Jailer 2 song 'Ala Polelo'.

ஜெயிலர் 2 ‘அலா பொலேலோ’ பாடலுக்கு நடனமாடும் டேவிட் வார்னர்: ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வைரல் வீடியோ!

Visual representation of director Ashwath Marimuthu revealing casting trivia for the movie Dragon.

‘டிராகன்’ பட வாய்ப்பை நழுவவிட்ட பிரீத்தி முகுந்தன்: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட சுவாரஸ்யத் தகவல்!