Latest News
பும்ரா பேரையும் சேத்துக்குங்க….விராட் கோலி ரெக்கமண்ட்டேஷன்…!…
இருபது ஓவர் உலக்கோப்பையை இந்திய அணி வென்றுள்ளதை நாடே கொண்டாடி வருகிறது. போட்டி முடிவடைந்து ஒரு வாரத்தை நெருங்கயிருந்தாலும் ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு விதமான கொண்டாட்டம் இருந்து தான் வருகிறது. நேற்று தாயகம் திரும்பிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை பிரதமர் மோடி அழைத்து பாராட்டியிருந்தார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் மும்பை வான் கடே மைதானத்தில் மிகப்பெரிய வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தது. கோப்பையுடன் வீரர்கள் வலம் வந்து ரசிகர்களை மகிழிவித்து அவர்களிடமிருந்து நேரடியாக வாழ்த்துக்களை பெறும் படியான ரோட்-ஷோவும் நடத்தப்பட்டது.
வான்கடே மைதானத்தை சுற்றி வளைத்த கிரிக்கெட் ரசிகர்களின் கூட்டத்தால் திக்கு முக்காடியது மும்பை. கடற்கரையில் கூடிய ரசிகர்கள் வெள்ளத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த வெற்றியை ரசிகர்களுடன் சேர்ந்து இந்திய அணி வீரர்களும் துள்ளிக் குதித்து கொண்டாடினர்.
கொண்டாட்டத்தின் போது பேசிய இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி வீரர்கள் அனைவரையும் வாழ்த்தினார். கபில் தேவ், ஜவஹல் ஸ்ரீநாத், ஜாகீர்கானிற்கு பிறகு எதிரணியை ஆட்டிப் படைக்ககும் வேகப்பந்து வீச்சாளர் இல்லை என இருந்த மிகப்பெரிய குறையை போக்கி வருவபவர் நட்சத்திர பவுலர் ஜஸ்பிரித் பும்ரா.
இவர் குறித்து பேசிய விராத் கோலி பும்ராவை எட்டாவது உலக அதிசயத்தில் சேர்த்து விடுங்கள் எனச் சொன்னார்.
இந்திய கிரிக்கெட் அணித் தலைவராக இருக்கும் ரோஹித் ஷர்மா சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரைப் போலவே நட்சத்திர வீரர் விராட் கோலி, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் இருபது ஓவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தங்களது ஓய்வை அறிவித்துள்ளனர்.
அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்து முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டின் பதிவிக் காலமும் முடிவடைந்தது. விரைவில் புதிய பயிற்சியாளர் நியமிக்கப் படுவார் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜெய்ஷா கூறியிருந்தார்.