---Advertisement---

கோரிக்கை வைத்த ஜாம்பவான்…அள்ளிக்கொடுத்து அதிரடி காட்டிய பிசிசிஐ…

Published on: July 14, 2024
Anshuman gaekwad
---Advertisement---

சமீபத்தில் நடந்து முடிந்த இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது இந்திய அணி. ரோஹித் சர்மா தலைமையிலான சாம்பியன்களுக்கு நூற்றி இருபத்தி ஐந்து கோடி ரூபாயை பரிசுத் தொகையாக அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது இந்திய கிரிக்கெட் வாரியம். இது வரை வழங்கப்பட்ட பரிசுத் தொகையிலே இது தான் அதிகப்படியானது.

இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவானும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான கபில் தேவ் ஒரு கோரிக்கை விடுத்திருந்தார். இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரரான அன்சுமன் கெய்க்வாட் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகீட்சை பெற்று வருகிறார்.

இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இவர் இருந்துள்ளார். பல தொடர்களில் வென்று சாதனை படைத்திருந்தது இந்திய அனி அந்த நேரத்தில்.

Jaisha Kapildev
Jaisha Kapildev

கபில் தேவ் விடுத்த கோரிக்கையில் அன்சுமனுக்கு உதவி கிடைக்க வேண்டும் என சொல்லியிருந்தார். தனது ஓய்வூதியத்தை அவருக்கு கொடுக்க இருப்பதாக சொல்லியிருந்ததோடு, முன்னாள் வீரர்கள் தங்களின் குடும்பத்தினரின் ஒப்புதலோடு முடிந்த அளவிலான உதவிகளை செய்யுமாறு கேட்டிருந்தார்.
இந்நிலையில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் அன்சுமன் கெய்க்வாடிற்கு உதவித் தொகையை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.

பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா, அன்சுமன் கெய்க்வாட்டிற்கு ஒரு கோடிரூபாயை உதவித்தொகையாக வழங்குவதாக அறிவித்தார். இதனை உடனடியாக சென்றடைய வேண்டும் என்பதில் ஜெய்ஷா தீவிரம் காட்டியுள்ளார். ரசிகர்களை மகிழ்வித்த கிரிக்கெட் முன்னாள் வீரருக்கு உரிய நேரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் உதவியுள்ள செய்தி கிரிக்கெட் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

পড়তে ভুলবেন না

டி ராஜேந்தர் விண்ணைத்தாண்டி வருவாயா சிம்பு கௌதம் மேனன் பாராட்டு.

டி ராஜேந்தர் விண்ணைத்தாண்டி வருவாயா: “அந்தப் படம் என்னையே வியக்க வைத்தது” – சிம்புவின் VTV பற்றி உருக்கமாகப் பேசிய டி.ஆர்!

மிருணாள் தாகூர் தனுஷ் சகோதரர் விளக்கம் வதந்தி முற்றுப்புள்ளி.

மிருணாள் தாகூர் தனுஷ்: “தனுஷ் என் சகோதரர் மாதிரி..” – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள்!

டெஸ்ட் கிரிக்கெட் வெள்ளை உடை வீரர்கள் சிவப்பு பந்து விளையாட்டு.

டெஸ்ட் கிரிக்கெட் வெள்ளை உடை: ஏன் வீரர்கள் வெள்ளையில் ஆடுகிறார்கள்? பின்னணியில் உள்ள ரகசியம்!

பள்ளிச்சட்டம்பி அப்டேட் கயாடு லோகர் டோவினோ தாமஸ் ஏப்ரல் 9 ரிலீஸ்.

பள்ளிச்சட்டம்பி அப்டேட்: டோவினோ தாமஸ் – கயாடு லோகர் மிரட்டல் லுக்! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் எம்ஜிஆர் பேச்சு தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தல் மும்முனை போட்டி.

விஜய் எம்ஜிஆர் பேச்சு: தமிழகத்தில் மும்முனை போட்டி! தவெக தலைவரின் அதிரடி அரசியல் கணிப்பு!

மனோரமா சின்ன தம்பி ரகசியம் இயக்குநர் பி வாசு பேட்டி.

மனோரமா சின்ன தம்பி ரகசியம்: கணவர் இறந்தும் நடித்த ஆச்சி! இயக்குநர் பி. வாசு பகிர்ந்த உருக்கமான தகவல்!